ஹோமாகம, பிற்றிபன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் மீகொடை,  காமினிபுரத்தைச் சேர்ந்தவரென பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவரே இத் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.