இந்தியாவில் தயாராகும் இந்திப் படங்களை திரையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள யூரி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களை இந்தியத் திரைப்படங்களில் பயன்படுத்த இந்திய அரசு தடைவிதித்தது.

இதற்கு பதிலடியாகவே இந்தித் திரைப்படங்களை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது என பாகிஸ்தான் அரசு நான்கு மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அந்தத் தடையை தற்போது பாகிஸ்தான் விலக்கியுள்ளது. திரையரங்கு உரிமையாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்தே இந்த முடிவை நவாஸ் ஷெரீப் எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவால், அடுத்து வெளியாகவுள்ள இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஷாருக் கானுக்கு பாகிஸ்தானில் பெரு வரவேற்பு இருப்பதால், அடுத்து வெளியாகவுள்ள அவரது திரைப்படமான ரயீஸுக்கு பலத்த ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.