சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழக பிரதம பயிற்றுனரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசனின் சர்வதேச பணிப்பாளரும் தேசிய கராத்தே நடுவருமான சிகான்.அன்ரோ டினேஸ் மற்றும் பயிற்றுனர்கள் சென்செய்.யூடின் சிந்துஜன், சென்செய்.கபில்தேவ் ஆகியோரின் தலைமையில் கராத்தே பயிற்சி பட்டறை அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

மேற்படி பயிற்சி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகேஸ்வரன், பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்ததுடன் வைத்திய கலாநிதி டாக்டர்.சிவா அடிப்படை உடல் ஆரோக்கியம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.