புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)

Published By: Priyatharshan

17 Jan, 2017 | 12:29 PM
image

http://www.virakesari.lk/article/15257

தொடர்ச்சி......

( ஆர். ராம்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனின் பதிவைத் தொடர்ந்து ஜே.வி.பி.தலைவர் அனு­ர­கு­மார திஸா­நாயக்­கவின் பதிவு வரு­மாறு, 

கேள்வி:- தேசிய அர­சாங்கம் உரு­வான பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தற்­போது எந்த மட்­டத்தில் உள்­ளது?

பதில்:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக்­கப்­பட்­டுள்­ளது. அர­சிய­ல­மைப்பு தொடர்பில் அர­சி­யல­மைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழுக்கள் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டங்கும் பரந்­து­பட்ட பல கார­ணிகள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்­றன.

முக்­கிய அம்­சங்­க­ளாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட  ஜனா­தி­பதி முறை­மையில் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டுதல் உள்­ளிட்ட கார­ணிகள் குறித்து இறுதி தீர்­மா­னங்கள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:-  புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப குழுக்­களும் அறிக்­கை­களை வழங்­கி­யுள்­ளன. அவற்றின் பிர­காரம் நீங்கள் மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னங்கள் என்ன?

பதில்:- அறிக்கை வழங்­கிய உப குழுக்கள் ஆறுக்கும் தனிப்­பட்ட பகு­திகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அது குறித்து அவர்கள் தந்த அறிக்­கை­யினை இறுதி தீர்­மா­ன­மா­கவும் கொள்ள முடி­யாது. ஒவ்­வொரு கார­ணங்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய மாற்று நட­வ­டிக்கைகள் குறித்தே அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.  இது தொடர்பில் பாரா­ளு­மன்ற விவாதம் ஒன்றை நடத்­திய பின்பே இறுதி தீர்­மா­னத்­தினை எடுக்­க­வுள்ளோம்.

கேள்வி:- தற்­போது தந்­துள்ள அறிக்­கையில் குறை­பா­டுகள் உள்­ளதா? அது குறித்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பரிந்­து­ரை­களைக் கொண்­டி­ருக்­கின்­றதா? 

பதில்:- உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் இறுதி தீர்­மானம் அல்ல. சில விட­யங்கள் குறித்து பல்­வேறு மாறு­பட்ட வடி­வங்­களில் விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதால் இது விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட வேண்­டிய அறிக்­கை­க­ளாக உள்­ளன. 

கேள்வி:- அனைத்­துக்­கட்­சி­களும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­தற்­கான பணியில் பங்­கெ­டுத்­துள்ள நிலையில் பிர­தான செயற்­பா­டு­களை கொண்­டுள்ள வழி­ந­டத்தல் குழவில் அங்கம் வகிக்கும் சிலர்  புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். மறு­பு­றத்தில் 19திருத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் மேலும் திருத்­தங்­களைச் செய்து அதனை அமுல்­ப­டுத்­தலாம் என்றும் பரிந்­து­ரை­களை கூறு­கின்ற நிலையில் உங்கள் கட்சி என்ன நிலைப்­பாட்டில் உள்­ளது? 

பதில்:- அர­சி­ய­ல­மைப்பு என்­பது ஒரு நாட்டின் சமூக, பொரு­ளா­தார நடை­மு­றை­க­ளுக்கு பாது­காப்­ப­ளிக்கும் மூல சாச­ன­மாகும். அதனால் தான் சமூக, பொரு­ளா­தார செயற்­பா­டுகள் மாற்றம் பெறும் போதுதான் அதற்­க­மை­வாக அர­சி­ய­ல­மைப்பும் மாற்றம் செய்­யப்­படும். 1949 சீன புரட்சியின் பின்னர் 1950 ஆம் ஆண்டில் புதிய கொள்­கை­களின் பிர­காரம் புதிய யாப்­பொன்று வகுக்­கப்­பட்­டது. 

1917 ரஷ்ய பொரு­ளா­தா­ரத்­திற்கு பொருத்­த­மான அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட்­டது. 1959ஆம் ஆண்டில் கியூப புரட்­சியின் பின்பும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் செய்­யப்­பட்­டது. ஆகவே சமூக பொரு­ளா­தார மாற்­றங்­களின் சட்­ட­ரீ­தி­யி­லான பாது­காப்பு என்றே அர­சி­ய­ல­மைப்­பினைக் கரு­த­வேண்டும். 

எமது நாட்டில் உரு­வாகும் அர­சி­ய­ல­மைப்பும் செல்­வந்த பொரு­ளா­தார கொள்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். இலங்கை நாட்டின் அர­சிய­ல­மைப்பு செல்­வந்த வகுப்­புக்­களை பாது­காப்­ப­தாக இருக்­கின்­ற­போதும் அதில் சில மாற்­றங்­களை செய்­ய­வேண்டும் என்­பதை மையப்­ப­டுத்­தியே நாம் போராட்­டங்கள் செய்­து­வ­ரு­கின்றோம். 

அர­சி­யல­மைப்பு மாற்றம் குறித்து பார்க்­கின்ற போது 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு தற்­போது 28 வரு­டங்­கள பழ­மை­யா­ன­தா­கி­யுள்­ளது. இது­வ­ரையில் இந்த அர­சி­ய­ல­மைப்பு 19 முறை திருத்­தப்­பட்­டுள்­ளது. 

அதில் 17 திருத்­தங்கள் அதி­கா­ரங்­களை தக்க வைத்­துக்­கொள்ளும் நோக்கில் செய்­யப்­பட்ட திருத்­தங்­க­ளா­கின்­றன. இரு தட­வைகள் மாத்­தி­ரமே ஜன­நா­ய­கத்­தினை தக்க வைத்­துக்­கொள்ளும் வகையில் திருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 17,19 ஆவது திருத்­தங்­களே ஜன­நா­ய­கத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக செய்­ய­ப்பட்­ட­வை­யா­கின்­றன.  

இவ்­வா­றான திருத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பா­னது திரிபு படுத்­தப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பா­கவே உள்­ளது. எனவே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் சமூக, பொரு­ளா­தார கார­ணிகள் உள்­ள­டங்­க­ளான மாற்­றங்கள் அவ­சி­ய­மா­கின்­றன. 

கேள்வி:- தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களின் பிர­காரம் உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டி என்ற வார்த்தை பிர­யோ­கத்தை பயன்­ப­டுத்தி கட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்­கு­வதா?  அல்­லது ஒற்­றை­யாட்சி என்ற  வார்த்­தையை மாற்­றாது அதனை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கு­வதா என்­பது பாரிய பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அதி­காரப் பகிர்­வுக்­கட்­ட­மைப்பு, அதற்­கான வார்த்தைப் பிர­யோகம் தொடர்பில் ஜே.வி.பி எவ்­வா­றான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது ?

பதில்:- ஒற்­றை­யாட்சி முறைமை, சமஷ்டி முறைமை என்­பன ஒரு நாட்டின் தன்­மையை பொறுத்தே அமையும். அவ்­வா­றான எந்த முறை­யிலும் எமது நாட்டு மக்­களின் பிரச்­சினை தீர்ந்­து­வி­டாது. வடக்கில் வாழும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்­பினால் மாத்­திரம் தீர்வு கண்­டு­விட முடி­யாது. பொது­வாக எமது நாட்டில் சாதா­ரண மட்ட மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தீர்வு கிடைக்­காது.

உதா­ர­ண­மாக கூறு­வ­தாயின் சாதா­ரண மக்­க­ளுக்கு காணப்­படும் சுகா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு இல்லை. தமிழ்,சிங்­கள, முஸ்லிம் பேதங்கள் இன்றி வாழும் மீனவ குடும்­பங்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைக்கு  அர­சி­ய­ல­மைப்­பினால் தீர்வு காண முடி­யாது. 

எனவே அடி­மட்ட பொரு­ளா­தார நிலையில் வாழும் மக்­களை மேம்­ப­டுத்த சமூக, பொரு­ளா­தார மாற்று திட்­டங்கள் வேண்டும். ஆனால் சிங்­கள, முஸ்லிம் மக்கள் முகம்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் போன்­றல்­லாது தமிழ் மக்கள் மாத்­திரம் முகம்­கொ­டுக்கும் நெருக்­க­டிகள் உள்­ளன. 

அதில் முக்­கி­ய­மா­னது மொழிப்­பி­ரச்­சி­னை­யாகும். அதேபோல் கலா­சார சிக்­கல்­களும் உள்­ளன. ஆகவே அர­சி­ய­ல­மைப்பு எந்த இனத்­த­வ­ருக்கும் பாத­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­யக்­கூ­டாது. அதனால் மக்­களின் பொது பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு கிட்டும் என்று நாம் நினைக்­க­வில்லை.

கேள்வி:-  தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் தமிழ் மக்கள் ஏழு தசாப்­தங்­க­ளாக முகங்­கொ­டுக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு  தீர்வு காண்­ப­தாயின் புதிய அர­சி­ய­லமைப்பின் ஊடா­கவே முடியும் என்ற  நிலைப்­பாட்டில் உள்­ள­னரே? 

பதில்:- வடக்கு மாகாண சபை உரு­வா­னது. அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் போது­மா­ன­தல்ல என்று அவர்கள் தர்க்­கிக்­கலாம். ஆனால் மத்­திய அர­சாங்­கத்தில் உள்ள அதி­கா­ரங்­களில் சில பகு­திகள்  மாகாண சபை­க­ளுக்கு பகி­ரப்­பட்­டுள்­ளது. 

அவ்­வா­றி­ருக்­கையில், மாகாண சபை அமைக்­கப்­பட முன்­னரும் தமிழ் மக்கள் பிரச்­சினை தீர்ந்­து­வி­ட­வில்லை. அமைக்­கப்­பட்ட பின்­னரும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்டு விடவில்லை என்பதே உண்­மை­யான நிலைப்­பா­டாகும்.

அதி­கா­ரத்­தினை தந்தால் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்று தர்க்­கிக்­கவும் முடியும். இருப்­பினும் அதி­கா­ரத்தை பகிர்­வ­தல்ல முக்­கிய பிரச்­சினை. 

சமூக பொரு­ளா­தார சிக்­க­லுக்குள் அடி மட்­டத்தில் வாழும் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்கள் உள்­ளனர். செல்­வந்­த­ர்களாக வாழும் தமிழ், சிங்கள்  குழுக்­களும் உள்­ளன. அந்­தக்­கு­ழுக்­களே பிரச்­சி­னை­களை சிக்­கல்­களை உரு­வாக்­கி­யுள்­ளன. 

இந்த விட­யத்தை சற்றே விரி­வாக கூறு­வ­தாயின், வடக்கு, கிழக்கில் தற்­போது யுத்தம் இல்லை. தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் பிரச்­சி­னைகள் இல்லை.  

ஆனால் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மேல் வகுப்­பி­ன­ருக்கும் கீழ் வகுப்­பி­ன­ருக்கும் இடையில் பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதே நிதர்­ச­ன­மாகும்.  ஆகவே, மேல் வகுப்­பி­ன­ரி­டத்­தி­லி­ருந்து கீழ் வகுப்­பி­ன­ருக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் போராட்­டத்­தி­லேயே நாம் உள்ளோம். 

அவ்­வா­றி­ருக்­கையில் இந்த வகுப்­பு­வா­தத்தை  தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே மக்­களை தொடர்ந்தும் பிளவுபடுத்­து­வ­தற்கு வெகு­வான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு சில உதா­ர­ணங்­களை என்னால் கூற­மு­டியும். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அமைச்­ச­ரவையில் பார்க்­கின்ற போது சம்­பிக்க ரண­வக்க, விமல் வீர­வன்ச, தொண்­டமான், ரிஷாட், ஹக்கீம், டக்ளஸ் இருந்­தனர். இவர்கள் சக­லரும் ஒரு வகுப்­பாக இருந்து கடந்த அர­சாங்­கத்தின் மோச­டி­க­ளுக்கு துணை போனார்கள். 18ஆவது திருத்தத்­திற்கு கையு­யர்த்­தி­னார்கள். அவ்­வா­றா­ன­வர்­களே தற்­போது  மக்­களை முரண்­படச் செய்­கின்­றனர். 

மற்­று­மொரு உதா­ர­ணத்தை பார்க்­கலாம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜன­வரி 8ஆம் திகதி மாலை அதி­கார மாற்­றத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திக்க பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க அல­ரி­மா­ளி­கைக்க்கு சென்றார். அவர்­க­ளுக்கு இடையில் தரகர் வேலை பார்ப்­பவர் யாரென்று பார்த்தால் திரு­குமார் நடேசன். அவ்­வா­றாயின் அவர்­க­ளி­டையில் பிரி­வி­னைகள் இல்லை 

மேல் வகுப்­பி­ன­ரி­டையே பிரி­வி­னைகள் இல்லை. ஆகவே தான் கீழ் வகுப்­பினர் அவர்­களின் வலைக்குள் சிக்­காது அனைத்­தினருக்கும் பிரி­வி­னைகள் அவ­சியம் இல்லை அனை­வரும் ஒன்­று­பட்டு வாழுங்கள் என்று அனைத்­தின மக்கள் மத்­தி­யிலும் நாம் கூறு­கின்றோம். 

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் இந்த நாட்டின் இரண்டாம் தரப்பு  என்று சிந்­திக்க இட­மில்­லாத வகையில் அவர்­களின் உரி­மைகள் பேணப்­பட வேண்டும். சக­லரும் இலங்­கையர் என்று பார்க்­கின்ற ஒரு அர­சி­யல­மைப்பு மாற்­றத்­திற்கு நாம் இணங்­கு­கின்றோம். 

அதனை விடுத்து அடி­மட்ட தமிழ்,சிங்­கள, முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தீர்­வாக அமையும் என்ற நிலைப்­பாட்டில் நாம் இல்லை.

கேள்வி:- உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழித்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்­து­வதை ஆத­ரிக்­கின்­றீர்­களா?  

பதில்:- உலகில் மக்கள், சமூ­க­மாக வாழ்­வ­தற்கு எத்­த­னித்த காலத்­தி­லி­ருந்து தனிப்­பட்ட தலைவர் ஒருவர் இருந்தார். அவரால் மக்­க­ளுக்­கு­ரிய பூமி, திரு­மணம் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் குறித்தும் அவரே தீர்­மா­னிப்­ப­வ­ரா­கவும் இருந்தார்.

அவ்­வாறு இருந்த சமூகம் தான் தனிப்­பட்ட ஒரு­வ­ருக்கு இருந்த அதி­கா­ரத்­தினை மக்கள் பிர­தி­நி­திகள் பல­ருக்கும் பகிர்ந்து கொடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பினை உரு­வாக்கும் அள­வுக்கு பரி­ணாம வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது. அது சமூக வளர்ச்­சியில் ஒரு சிறப்­பாகும். 

அவ்­வா­றான முறை­மையை மாற்றி 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் மக்கள் பிர­தி­நி­தி­களின் சபை­யினை முழு­மை­யாக கைய­கப்­ப­டுத்­திக்­கொள்ளும் வகையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது. 

சமூக பய­ணித்­த­மைக்கு முர­ணான ஒரு விட­ய­மா­கவே அச்­செ­யற்­பாடு  அமைந்­தது. அவ்­வா­றில்­லாது பொதுக் கலந்­து­ரை­யா­டலின் பிர­காரம் சட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­மாயின் அது மிகவும்  சிறந்­த­தொரு செயற்­பா­டாகும். 

அத­ன­டிப்­ப­டையில்  நிறை­வேற்று அதி­கார முறை­மையை தவிர்த்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரத்­தினை வழங்­கு­வது சிறந்த­தென நாம் கரு­து­கின்றோம். 

கேள்வி:- பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் போதும் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள பிர­த­மரை உரு­வாக்­குவ­தாக அமைந்­து­வி­டு­மல்­லவா?

பதில்:- எமது நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் அதி­கா­ரங்­களை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொள்­ளவே முயற்­சிக்­கின்­றனர். அதனால் தான் தற்­போது உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் பிர­தமர் அதிக அதி­கா­ரங்­களை தமக்கு கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு மறை­மு­க­மாக முயற்­சிக்­கின்றார். மீண்டும் ஒரு­முறை பிர­த­ம­ராக வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர் உள்ளார். பிர­த­மரின் அந்த முயற்­சியை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். அர­சி­ய­லமைப்பு சபையில் முன்­னெ­டுக்­கப்­படும் பேச்­சு­வார்த்­தை­களின் போது எமது நோக்­கத்­தினை மையப்­ப­டுத்­திய தலை­யீ­டு­களை செய்வோம்.

கேள்வி:- அவ்­வா­றாயின் மத்­தியில் குவிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் அடி­மட்டம் வரையில் அல்­லது உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் வரையில் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­கின்ற போது எவ்­வாறு பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் மக்கள் விடு­தலை முன்­னணி  உள்­ளது? 

பதில்:- எமது கொள்­கையின் பிரகாரம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நாம் முன்­மொ­ழிந்த திட்­டத்தில் மக்கள் சபை ஒன்­றினை பரிந்­து­ரைத்­தி­ருந்தோம். அந்த மக்­கள் சபை இனம், மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அமை­யாது.

அந்த சபை­யா­னது தனி மனிதன் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகை­யி­லான ஒரு சபை­யாக அமைய வேண்டும். உதா­ர­ண­மாக மகா­வலி திட்டம் அமைக்­கப்­பட்ட போது மகா­வலி அதி­கார சபைக்கு சகல அதி­கா­ரங்­க­ளும் வழங்­கப்­பட்­டன. அது­போன்று  யுத்­தத்தினால் பாதிக்­கப்­பட வடக்கு பகு­தி­க­ளுக்கும் முழு­மை­யான அவ­தானம் செலுத்தி அப்­ப­கு­தி­களை ஏனைய பகு­தி­க­ளுக்கு நிக­ரான பொரு­ளா­தார மட்­டத்திற்கு மேலு­யர்த்த வேண்டும். மலை­ய­கத்­திற்கும் இந்த விடயம் பொருந்தும். 

அவற்றை விசேட வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்தி அதி­கார சபைகள் ஊடாக அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள வேண்டும். என்­பதே எமது கொள்­கையா­க­வுள்­ளது. ஆனால் இந்த தலை­வர்­க­ளி­டத்தில் அதனை எதிர்­பார்க்க முடி­யாது. இவர்கள் அதி­கா­ரங்­களை பகிர்ந்து மாகாண சபை­களை வலு­வாக்­கு­வதால் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும் என்று மட்­டுமே சிந்­திக்­கின்­றனர். அந்த நிலைப்­பாட்­டினை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள தயா­ரில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­பில் ­மா­காண ஆளு­நர்­களின் அதி­கா­ரங்­களை குறைத்து அவர்­களை மத்­திய அர­சாங்­கத்தின் கௌரவ பிர­தி­நி­தி­க­ளாக மாத்­திரம் அமர்த்த வேண்டும் என்ற யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தல்­லவா?

பதில்:- இந்த விடயம் இன்­னமும் உத்­தேச மட்­டத்­தி­லேயே உள்­ளது. ஆனால் மாகாண சபை­க­ளுக்கு மேல­திக அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தாயின் ஆளு­நரின் தன்மை எவ்­வா­றா­னது, மாகாண சபைகள் இணை­வ­தற்கு இடம்­கொ­டுக்க வேண்­டுமா, அதிக அதி­கா­ரங்கள் நிறைந்த மாகாண சபைக்கும் மத்­திய அர­சுக்கும் உள்ள தொடர்­புகள் எவை என்ற விட­யங்கள் குறித்து தீர்க்­க­மாக ஆரா­யப்பட வேண்டும். இவை பார­தூ­ர­மான கார­ணிகள் என்றே நாம் கரு­து­கின்றோம். ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் மற்­றைய முக்­கிய  விட­யங்­க­ளுடன் சேர்த்து இவற்­றையும் ஆராய வேண்டும்.

கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதி­ராக ஜே.வி.பியே வழக்கு தாக்கல் செயது அதனை தனித்­தனி மாகா­ணங்­க­ளாக மாற்­றி­யது. அவ்­வா­றி­ருக்­கையில் தமிழ் மக்­களின் அதி­க­ள­வான ஆணை பெற்ற கூட்­ட­மைப்பு தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வில் வடக்கு கிழக்கு இணைப்பு முக்­கி­ய­மென வலி­யு­றுத்தி வரு­கின்ற நலையில் அதற்கு  நேர்­மா­றான நிலைப்­பாட்­டி­னை­யல்­லவா நீங்கள் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:- வடக்கு, கிழக்கு இணை­விற்கு என்ன காரணம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது என்று பார்க்­கையில் அந்த மாகாண சபைகள் இரண்டும் அருகில் அமைந்­தி­ருப்­பதா அல்­லது அபி­வி­ருத்தி மட்­டத்தில் வேறு­பாடு உள்­ள­மையா? இவை எதுமே அல்ல.

உண்­மை­யி­லேயே இன­வாதத்­தினை மையப்­ப­டுத்­திய கோரிக்கை என்றே கூற வேண்டும். மக்கள் பிரச்­சினைக்கு தீர்வு காண வேண்­டு­மாயின் அல­குகள் சிறி­தாக வேண்டும். அப்­போ­துதான் மக்­க­ளுடன் நெருக்­க­மாக இருந்து பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க முடியும். வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு தமிழ் மக்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர் என்று காரணம் கூறப்­ப­டு­கின்­றது.  

அது உண்­மை­யல்ல. வடக்கு, கிழக்­கிற்கு வெளியி­லேயே தான் 51.8 வீத­மான தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். அதனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஏனைய மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சினை இல்­லை­யெனக் கரு­த­மு­டி­யாது. அம்­மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து என்ன நிலைப்­பாடு என்­பது தொடர்­பா­கவும் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதை விடவும் கூட்­ட­மைப்பின் உள்ளே காலம் கால­மாக முன்­நி­றுத்­தப்­பட்டு வந்த எண்­ணக்­க­ரு­வே­யாகும். அவர்கள் அந்த எண்­ணக்­க­ரு­விற்குள் சிறை­பி­டிக்­கப்­பட்­டுள்­ளனர். 

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் மக்கள் விடு­தலை முன்­னணி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதி­ராக போர்க்­கொடி பிடித்­துக்­கொண்­டேதான் இருக்­குமா? 

பதில்:- அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரு­கின்ற போது தான் அது குறித்து தீர்­மா­னிக்க முடியும். ஆனால் புதிய அர­சி­ய­லமைப்பு மீதான வாக்­கெ­டுப்பின் வெற்றி ஜனா­தி­பதி தேர்­தலில் கிடைத்த வெற்றி போன்று அமைய வேண்டும் என்­ப­தில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­படும் என்ற நம்­பிக்­கையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டி­ருக்­கின்­றதா?

பதில்:- நாட்டில் பரந்து வாழும் மக்­களின் அங்­கீ­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு  கிடைக்­கப்­பெற வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால்  ஒரு புதிய குழப்பம் ஏற்­படும். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற கட்­சி­க­ளுக்கு அர­சி­ய­லமை­ப்பு குறித்து பேச முடி­யாது போய்­விடும். அதனால் அர­சி­ய­லமைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வது குறித்து ஆழ­மாக சிந்­திக்க வேண்டும் 

1972 ஆம் ஆண்டு அர­சி­யல­மைப்பு மூன்­றி­லி­ரண்­டு பாரா­ளு­மன்ற பெரு­ம்பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­பட்­டது. 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு ஆறில் ஐந்து என்ற பாரா­ளுமன்ற பெரும்­பான்­மையை கொண்டு நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட்­டது. 

வர்த்­த­மானி அறிவித்தல் ஒன்றை நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாத ஒப்­பந்தம் ஒன்றை முறை­யாக கைச்சாத்­திட முடி­யாத அர­சாங்­கத்­திடம் மக்கள் அர­சி­ய­லமைப்­பொன்­றினை எதிர்­பார்ப்­பது சற்று கடி­ன­மா­ன­தாகும். 

கேள்வி:- தேசிய அர­சாங்­கத்தின்  வாக்­கு­று­தியின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம்  நிக­ழாது போவ­தற்கு சந்­தர்ப்­பங்கள் உள்­ள­னவா? 

பதில்:- அர­சி­ய­ல­மைப்­பினை பார்க்­கிலும் பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதே எமது மிகப்­பெ­ரிய இலக்­காகும். அதற்கு தீர்வு காண முடி­யாத ஒரு அர­சாங்கம்  எவ்­வாறு அர­சி­ய­லமைப்பு போன்ற கடி­ன­மான விட­யத்தில் தீர்வு காணும். 

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை இந்த அர­சாங்கம் வழங்க முடியும் என நம்ப முடி­யுமா? இந்த எல்லா ஆட்­சி­யா­ளர்­களும் தமது பத­வியை பாது­காப்­ப­தற்கு இன­வாதத்­தினை தூண்­டி­யுள்­ளனர். 

யாழ்ப்­பாணம் நூல­கத்­தினை இவர்­களே தீயிட்டு கொளுத்­தி­னார்கள். 1983 ஆம் ஆண்டில் தமது அதி­கா­ரத்­திற்­காகவே கருப்பு ஜூலையை ஏற்­ப­டுத்­தி­னார்கள். தமது அதி­கா­ரத்­திற்­கான அடி­மட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த தலை­வர்­க­ளி­டத்தில் எவ்­வாறு நாம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை எதிர்­பார்ப்­பது. 

1948 சுதந்­தி­ரத்தின் பின் பிர­தான கட்­சிகள் இரண்­டும் வீதி­ய­மைப்பு உள்­ளிட்ட விட­யங்­களில் திருத்தம் செய்­தாலும் நீதிக் கட்­டமைப்பு, பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்­களில் சிறந்த மாற்­றங்கள் எவையும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்கு பிர­தான கட்­சிகள் இரண்டின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கு முடி­யாது போனது. அவர்­களின் யுகம் முடிந்­து­விட்­டது. உலகில் ஒரு யுகம் முடி­கின்ற போது இவ்­வா­றுதான் திருட்­டுக்­களும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களும் இடம்­பெறும். 

ஆகவே பணிகள் கடி­ன­மாக இருப்­பினும் மக்­க­ளுக்­கான தீர்வு பெற்­று­கொள்­ளப்­ப­டத்தான் வேண்டும். எனவே தமிழ் மக்­க­ளுக்கும் இதற்­காக எம்­முடன் இணைந்து போரா­டு­வ­தற்கு முன்­வா­ருங்கள் என்று அழைப்பு விடுக்­கின்றோம்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வே­று­வது குறித்து நீங்கள் சந்தேகத்­துடன் இருக்­கின்­றீர்கள். அவ்­வா­றானால் வழி­ந­டத்தல் குழு, உப குழுக்கள் உள்­ளிட்டவற்றில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள உங்­க­ளுக்கும் கட்­சிக்கும் பொறுப்புக் கூறு­த­லிலி­ருந்து விலகி நிற்க முடி­யா­தல்­லவா? 

பதில்:- நாம் முழு­மூச்­சுடன் முயற்­சிப்போம் எமது எல்­லைக்கு உட்­பட்டு தமிழ்,சிங்­கள, முஸ்லிம் மக்­களின் உரி­மை­களை பாது­காப்­பதற்­காக அழுத்தம் கொடுப்போம். அதில் மாற்­ற­மில்லை.  எவ்­வா­றா­யினும் சிறந்த ஒரு மாற்­றத்­திற்கு வித்­திட வேண்டும் என்­பதே எமது இலக்­காகும். அதனை அடை­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம். 

கேள்வி:- புதிய அர­சி­ய­லமைப்பு அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா அமுல்­ப­டுத்­த­ப்ப­டாதா என்ற இக்­கட்­டான  நிலைமை ஏற்­பட்­டுள்ள நிலையில்  மக்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வா­றான திட்­டத்­தினை கொண்­டுள்­ளது?

பதில்:- மக்கள் பிரச்­சினையை இன பாகு­பாட்டின் பிர­காரம் பார்க்­க­வில்லை பொது­வாக சமூக பொரு­ளா­தார கொள்­கையில் ஒரு சிறந்த மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு இல்லாவிட்டாலும் யாராலும் தொழில் வாய்ப்புக்களை  அடைய முடியாது.

கடந்த ஆட்சியில் அரசாங்க அலுவலகங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் அடைந்த பயன் எதுவும் இல்லை. நாடு கடனில் இறுகியுள்ளது. கடன் என்பது நாடு என்றும் நாட்டின் மீதுள்ள சுமையாகவே இருக்கும். தற்போது  நாட்டில் மேல் வகுப்பு மக்களுக்கும் கீழ்வகுப்பு மக்களுக்கும் இடையில் நாட்டின வருமானம் பிரிந்து செல்வதில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை சரிபடுத்துவதே எமது நோக்கமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது. அதனால் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவுள்ள திட்டங்கள் முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும். 

அரசாங்கத்தில் உள்ள எந்த இனவாத கட்சிகளுக்கும் இடமளிக்காது மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை கையிலெடுத்தாலே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.  எமக்கு வாக்களிப்பவர்கள் இனவாதிகள் அல்ல என்றால் ஆட்சியும் இனவாதம் களைந்ததாக இருக்கும். அதற்கு முன்னதாக நாட்டில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும்  களைவதற்கு நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பயணம் தொடரும்.....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22