வெல்லாவெளியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

19 மற்றும் 20 வயதான இளைஞர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.