பூண்டுலோயா - நியங்கந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில்  கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பூண்டுலோயா வைத்தியசாலையில் பணிபுரியும் பல் வைத்தியரின் புதிய வீடு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுவரும் இடத்திலிருந்த சுமார் ரூபா 40 ஆயிரத்திறகும் மேற்பட்ட பெறுமதியுடைய கட்டுமானத்திற்கு தேவையான கருவிகள் உட்பட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக பூண்டுலோயா  பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பூண்டுலோயா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுபசிங்க தலைமையில் 
மேற்கொள்ளப்பட்ட  தேடுதல்  விசாரணைகளின் போது, கொள்ளையுடன்  சம்பந்தப்பட்டதாக கருதப்படும் நபரை களவுபோன பொருட்களுடன் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் அம்பாறை பகுதியைச் சேர்ந்தவரென முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தின் பதில் நிலையப் பொறுப்பதிகாரி சுபசிங்க மேலும் தெரிவித்தார்.