நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு பிணை.!

Published By: Robert

16 Jan, 2017 | 02:51 PM
image

ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேரில் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த 10 பேரை ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவிலவில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற, சீன - இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின்போதே குறித்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது.

இதன்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில்; நேற்று இரவு 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21