வவுனியா சுந்தரபுரம் பகுதியில் 14வயது சிறுமி மீது உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருவதாவது, 
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனியாக வீட்டில் இருந்த 14 வயது சிறுமி ஒருவரை அவரது 26 வயதுடைய உறவினர் ஒருவர் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடை மூடியிருந்ததையடுத்து அருகிலுள்ள ஆட்களற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதையடுத்து  வீட்டிற்கு வந்த சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துள்ளதை அறிந்த வீட்டார் சிறுமியிடம் விடயத்தினை கேட்டறிந்ததுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் சிறுமியை வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதித்தனர். முறைப்பாட்டினைடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின் உறவு முறையான குறித்த இளைஞனைக் கைதுசெய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.