ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை திரிஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியேறுவதாக அதிரடியாக அறிவத்துள்ளார். இதனையடுத்து 3.19 மில்லியன் ஆதரவாளர்களை கொண்ட திரிஷாவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கம் தற்போது செயலிழக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக உள்ள திரிஷாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் சமூக வலைத்தளங்களில் திரிஷாவுக்கு எதிராக பதிவேற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தான் ஒருபோதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து வெளியிடவில்லை எனவும் தனது டுவிட்டர் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள் தான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள் எனவும் திரிஷா தெரிவித்திருந்தார்

எனினும் திரிஷாவுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் தான் தனது டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அதிரடியாக அறிவித்துள்ளார். 

இந்த முடிவு தற்காலிகமானது தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெட்கப்பட வேண்டும்

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாசாரமா? தமிழ் கலாசாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும் என்று திரிஷா ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

பீட்டா அமைப்பு

 பீட்டா உறுப்பினர் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கிய விலங்குகள் நல வாரிய அமைப்பான பீட்டாவில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார். பெரும்பாலான முக்கிய நடிகர், நடிகைகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.