தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையானது தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் இல்லை. மாறாக சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கான கொள்கையாகவே அமைந்துள்ளது. இதனால் தான் அசியமற்ற முறையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளதோடு  அந்நிதியத்தின் நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மூலம் மக்கள் மீது வரிச்சுமை விதிக்கப்பட்டுள்ள. அத்துடன் கடந்த காலங்களில் மக்கள் போராடி பெற்றுக்கொண்ட சலுகைகளும் தற்போது பறிக்கப்பட்டுள்ளன.

 நல்லாட்சி அரசாங்கம் இலங்கை இராணுவத்தை மாத்திரமல்லாமல் அரசியல் தலைவர்களையும் சர்வதேச நீதி மன்றுக்குக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.