இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள்

Published By: MD.Lucias

14 Jan, 2017 | 05:14 PM
image

(ஆர்.வி.கே)

நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று  மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் நாட்டின் அரச நிறுவனங்கள் பாடசாலைகள் பல்கலைகழகங்கள் போன்ற இடங்களில் நல்லிணக்க வார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் தேசிய நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கமைய வலிவடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன்பிடி துறைமுகப்பகுதிகள் மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டன.

கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய அசாதாரன நிலமைகளால் வலிவடக்கில் இருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டதன் காரணமாக பகுதி பகுதியாக வலி வடக்கில் மக்கள் ஒரளவு மீளக்குடியமர்த்தப்பட்டிருந்துடன் மக்களது காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் மீள குடியமர்ந்த மக்கள் தமது தொழில்களை செய்வதற்கான நிலங்கள் மற்றும் தமது மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்கான மயிலிட்டி,ஊரணி ஆகிய துறைமுக பகுதிகளும்  விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறாயினே தமது வாழ்வாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியும் என தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வந்திருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே தற்போது பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி வடக்கில் மீள குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது மீன்பிடி தொழிலை செய்வதற்கும் தமது படகுகளை நிறுத்துவதற்கும் ஏற்வகையில் ஊரணி துறைமுகப் பகுதியையும் மக்களிடம் மீள கையளிப்பதற்கான பணிப்புரையை விடுத்திருந்தார் அதற்கமைய இன்று இப் பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட இராணு கட்டளை தளபதி மேஜர் ஜெனறல் மகேஸ் சேனநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நல்லிணக்க விடையங்களுக்கு செயலாளராக உள்ள சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரச அதிபர்,கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள்,பிரதேச செயலர்,பொதுமக்கள் மீள்குடியேற்ற குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58