நியூஸி­லாந்­துக்கு எதி­ரான கிரிக்கட் போட்­டி­களில் இலங்கை அணியின் தோல்­விக்கு இலங்கை கிரிக்கட் நிர்­வா­கமே காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க, கடந்த ஐந்து வரு­ட­கா­ல­மாக நாம் ஒரு திற­மை­யான அணியை உரு­வாக்­கவில்­லை­யெ­னவும் குற்றம் சாட்­டினார்..

நியூஸி­லாந்­துக்கு சென்­றுள்ள இலங்கை கிரிக்கட் அணி அங்கு விளை­யா­டிய போட்­டிகளில் தோல்வி கண்­டமை தொடர்­பாக கருத்து வெளியிட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக எமது அணியை கட்­டி­யெ­ழுப்­பாது ஒரு­சில வீரர்­களை மட்­டுமே தயார்­ப­டுத்­தினோம். எமது கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் சிறந்த வீரர்.

நியூஸி­லாந்­துக்கு புதிய வீரர்­களை கொண்டு சென்று கடலில் தள்­ளி­வி­டு­வதை விடவும் திற­மை­யான வீரர்­களை அழைத்து சென்­றி­ருக்­க­வேண்டும். தற்­போ­தைய நிலையில் புதிய வீரர்கள் கொண்டு செல்­லப்­பட்­டமை பெரும் குறை­பா­டாகும்.