வவு­னியா மாவட்­டத்தின் மூத்த பிர­ஜை­யா­கிய சதா­சிவம் ஐயா என்று எல்­லோ­ராலும் அன்­போடு அழைக்­கப்­படும் வேலா­யுதம் சதா­சிவம் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை குரு­மண்­காட்டில் உள்ள தமது குறிஞ்சி இல்­லத்தில் 104 ஆவது வயதில் கால­மானார்.

முது­மையின் தளர்ச்­சி­யுடன் தானா­கவே நட­மாடி, தனது தேவை­களைப் பூர்த்தி செய்து நீண்ட ஆயு­ளுடன் வாழ விரும்­பு­ப­வர்­க­ளுக்கு ஓர் உதா­ரண புரு­ஷ­ராக வாழ்ந்து காட்­டி­யி­ருக்­கின்றார்.

அன­லை­தீவு அவ­ருடை சொந்த இடம். எட்டு பிள்­ளை­களைக் கொண்ட குடும்­பத்தில் எட்­டா­வது பிள்­ளை­யாக சதா­சிவம் 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவர் தனது ஏழு வயதில் தனது தாய்­தந்­தை­யரை இழந்தார்.

ஆரம்ப கல்­வியை அன­லை­தீவில் பயின்ற இவர், பின்னர் சிங்­கப்­பூ­ருக்குச் சென்று அங்கு தனது கல்­வியைத் தொடர்ந்து மேற்­கொண்டார். பின்னர் 1938 ஆம் ஆண்டு தாயகம் திரும்­பிய அவர் அரச சேவையில் இணைந்து கொண்டார். உள்­ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தில் பணி­யாற்­றிய இவர் 1945 ஆம் ஆண்டு வவு­னி­யாவில் குடி­யே­றிய பின்னர், அப்­போது தர­மு­யர்த்­தப்­பட்ட வவு­னியா நகர சபையின் முத­லா­வது செய­லா­ள­ராக நீண்­ட­காலம் பணி­யாற்­றினார்.

இவ­ருக்கு நான்கு பிள்­ளைகள். ஆண் குழந்­தை­யொன்று. பெண் குழந்­தைகள் மூன்­று. தனது மனை­வியை 1983 ஆம் ஆண்டு இழந்த இவர் தனது மூத்த மக­ளுடன் வசித்து வந்தார். வைத்­தி­ய­ராகப் பணி­யாற்­றிய மகன் நோயினால் இறந்து போனார். ஒரு மகள் கன­டா­விலும், ஒருவர் யாழ்ப்­பா­ணத்­திலும் மற்­றவர் வவு­னி­யா­விலும் வசித்து வரு­கின்­றனர். இவ­ருக்கு 9 பேரப் பிள்­ளைகள். 9 பூட்­டப்­பிள்­ளைகள்.

சிறந்த கல்­வி­ய­றிவும், அபா­ர­மான ஞாபக சக்­தியும் கொண்ட சதா­சிவம் ஐயா­வுக்கு சமயம், இலக்­கியம் என்­ப­வற்றில் அதிக ஈடு­பாடு உண்டு. ஆலய நிகழ்­வு­களில் தவ­றாமல் கலந்து கொண்­டி­ருந்த இவ­ரு­டைய ஆன்­மிகச் செயற்­பா­டு­க­ளுக்­காகப் பலரும் பாராட்டி பொன்­னாடை போர்த்தி கௌர­வ­ம­ளித்து மகிழ்ந்­துள்­ளனர்.

திரு­வா­சகம் என்றால் இவ­ருக்கு உயிர். தின­சரி அதி­கா­லை­யி­லேயே எழுந்து திரு­வா­சகப் பாடல்­களை தேன்­சொட்ட, பல மணித்­தி­யா­லங்கள் பாடுவார். ஆல­யங்­க­ளுக்குச் செல்லத் தவ­ற­மாட்டார்.

மனதை சம­நி­லையில் வைத்துக் கொள்ள வேண்டும். கவ­லை­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது என்­பதே அவ­ரு­டைய வாழ்­வியல் இர­க­சியம்.

ஆங்­கி­லே­ய­ரு­டைய ஆட்சிக் காலத்தில் பிறந்து, இரண்டு உலக மகா­யுத்­தங்­களைக் கண்டு, தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான சாத்­வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்­ப­வற்­றையும் தரி­சித்து, யுத்த நெருக்­க­டிகள், வாழ்­வியல் நெருக்­கு­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும் சம­னான மன­நி­லை­யுடன், மற்­ற­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக வாழ்ந்து காட்டிச் சென்­றுள்ள சதா­சிவம் ஐயா ஒரு வாழ்­வியல் சாதனையாளர் என்றால் மிகையாகாது.

சதாசிவம் ஐயாவின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அவருடைய குறிஞ்சி இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.