வவுனியா ஏ9 வீதி வைத்தியசாலைக்கு அருகே இன்று (12 ) மதியம் ஏற்பட்ட வேன் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஏ9 வீதிக்கு செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியாவிலிருந்து ஒமந்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.