இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருடம் வரையான குடியிருப்பு வீசாவை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அதன் பிரகாரம், குறைந்தபட்சம் 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை (யுஎஸ்டீ 300,000) முதலீடு செய்யும் வெளிநாட்டவர், குடியிருப்பு வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டு, 5 வருடம் வரையில் அமையும் வகையிலான குடியிருப்பு வீசாவை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.