கைக் குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உடம்பில் மறைத்து வைத்திருந்த ஹெரோயினை நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

பிரியந்த சஞ்சய என்ற சந்தேக நபர் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து சிலாபம் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக அழைத்து செல்லப்பட்டு மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் போதைப் பொருளை கொண்டு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தேக நபரை சோதனை செய்தபோது சந்தேக நபர் உடம்பினுள் ஒரு கிராம் 330 மில்லிகிராம் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்திலக்க வெலிவிட்டவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.