விமல் வீரவன்ஸவின் கைதுக்கு காரணம் வெளியாகியது

Published By: Raam

12 Jan, 2017 | 11:47 AM
image

அரசாங்கத்துக்கு சொந்தமான  40 வாகனங்களை சட்டவிரோதமாக  பயன்படுத்தி  நாட்டுக்கு 9 கோடியே 16 இலட்சம் ரூபாவை துஷ்பிரயோகம்  செய்த  காரணத்திற்காகவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்  வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளார்.   இதில் எந்தவிதமான அரசியல்  பழிவாங்கல்களும் இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  பிரதியமைச்சர் அஜித் பி  பெரேரா தெரிவித்தார்.  

விமல் வீரவன்ஸவின் அக்காவின் இளையமகன், மூத்தமகன், மனைவியின்  அக்காவின் கணவர், தங்கையின் கணவர், விம லின் தங்கை என இந்த  வாகனங்களை பயன்படுத்தியவர்களின்  பட்டியல் 'பீ ' அறிக்கையில்  நீண்டு கொண்டே செல்கிறது என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து  கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

40 வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி  நாட்டுக்கு  9 கோடியே 16  இலட்சம் ரூபாவை நஷ்டப்படுத்திய காரணத்திற்காகவே தேசிய சுதந்திர  முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளார். இதில்  எந்தவிதமான அரசியல் பழிவாங்கல்களும் இல்லை என்பதை நாட்டு மக்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.  

அவர் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது  அரச பொறியியல்  கூட்டுத்தாபனத்தில் 2014 ஆம் ஆண்டு  முன்னெடுக்கப்பட்ட உள்ளக  கணக்காய்வின் போது 40 வாகனங்கள்  துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கடந்த  அரசாங்கத்தின் காலத்திலேயே இந்தக்குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.  

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி  அரச  பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர்   நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில்  இது தொடர்பாக முறைப்பாடு செய்தார்.  அந்த  முறைப்பாட்டுக்கு அமைவாக  நடத்தப்பட்ட விசாரணையின் முடிவிலேயே  விமல் வீரவன்ச  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம்  அமைச்சுடன்  சம்பந்தப்படாதவர்களுக்கு இவ்வாறு 40  வாகனங்களை வழங்கியமையினால் நாட்டுக்கு 9 கோடியே 16  இலட்சத்து 35  ஆயிரத்து 599 ரூபா  நஷ் டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த  வாகனங்களுக்கான வாடகை, எரிபொருள் செலவு, சாரதிகளுக்கான சம்பளம்,  மேலதிக கொடுப்பனவு என்பவற்றுக்காகவே இந்த செலவுகள்  செய்யப்பட்டுள்ளன.  

அப்போது இதில் கடமையாற்றிய  அதிகாரி ஒருவரே அமைச்சரின்  உத்தரவின்பேரில்  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 1982 ஆம்  ஆண்டு 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோகத்தின் கீழேயே விமல்  கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த 40 வாகனங்களைப் பயன்படுத்தியவர்களில் சந்தேக நபரின் உறவினர்கள்  உள்ளனர்.  இவை அனைத்தும் 'பீ ' அறிக்கை யில் காணப்படுகின்றன. விமல்  வீரவன்ஸவின் அக்காவின் இளையமகன், மூத்தமகன், மனைவியின் அக்காவின்  கணவர், தங்கையின் கணவர், விமலின் தங்கை என  இந்த வாகனங்களை  பயன்படுத்தியவர்களின்  பட்டியல் 'பீ 'அறிக்கையில்  நீண்டுகொண்டே  செல்கிறது.

அதாவது இதன்மூலம்  நாட்டு மக்களுக்கு  9 கோடியே 16 இலட்சம் ரூபா  நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்க அதிகாரிகளுக்கும் ஒரு சிறந்த  பாடமாக அமையவேண்டும். காரணம் விசாரணையின் போது   விமல்  வீரவன்ஸ  வாக்குமூலமளிக்கையில்   தான் அமைச்சர் என்ற ரீதியில்  உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் அது தவறு எனின்  அதிகாரிகள்    சுட்டிக்காட்டியிருக்கவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.  

அந்தவகையில், அதிகாரிகளும் சுயாதீனமாக நடந்துகொள்ள வேண்டியது  மிகவும் அவசியமாகும்.

கேள்வி:- அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அப்போது தலைவராக  இருந்தவர்  தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.  அப்படியாயின்  ஏன் அவரை கைதுசெய்யவில்லை?

பதில்:- (ராஜித)  இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். நான்  நிர்மாணத்துறை  அமைச்சராக இருந்தபோதுதான்  நீங்கள் கூறும் இந்த நபர் அரச பொறியியல்  கூட்டுத்தாபனத்தில்  தலைவராக கடமையாற்றினார். அவர் சிறப்பாக  சேவையாற்றினார்.  அவரில் எவ்விதமான தவறுமில்லை.  நஷ்டத்தில்  இயங்-கிய  பொறியியல் கூட்டுத்தாபனத்தை அவர் இலாபகரமாக மாற்ற  முயன்றார். அதுமட்டுமன்றி அவர் 2011 ஆம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து  விலகிவிட்டார்.  இந்த துஷ்பிரயோகங்கள் அதன் பின்னரே நடைபெற்றுள்ளன.

பதில்:-(அஜித் பி பெரேரா) வாகனங்களை எவ்வாறு  பயன்படுத்துவது என்பது  தொடர்பான சட்டதிட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த அனைத்து  விதிமுறைகளையும் மீறி விமல் வீரவன்ஸ  தனது உறவினர்களுக்கும்   தேவையானவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஒன்று, இரண்டு என்றால்  ஏதோ  தவறு நடந்திருக்கின்றது என்று கூறலாம்.  ஆனால் 40  வாகனங்களை   துஷ்பிரயோகம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

கேள்வி:-  இந்த 40 பேரில்   ஒரு-சில ஊடகவியலாளர்களும் உள்ளதாக  கூறப்படுகின்றதே?

பதில்:- ஒரு சில  ஊடகவியலாளர்களின் பெயர்கள் பி அறிக்கையில் உள்ளன.   ஆனால் அவற்றை நான் கூறுவது முறையல்ல.  அதனை என்னிடம்  கேட்காதீர்கள்.

கேள்வி:- நீங்கள் தேர்தல் காலத்தில் மெகா டீல் தொடர்பாக பேசினீர்கள்,   ஆனால் தற்போது இந்த சிறியளவிலான வாகன விடயங்கள் தொடர்பில்தானே  கைதுகள் இடம்பெறுகின்றன?

பதில்:- உங்களுக்கு  இது சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால் 9 கோடி ரூபா  என்பது இலங்கையர்களுக்கு பெரிய விடயமாகும்.

கேள்வி:- விமல் கைதுசெய்யப்படுவார் என மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு  முன்கூட்டியே கூறினார்?

பதில்:- தான் செய்துள்ள தவறின் அடிப் படையில்  கைதுசெய்யப்படலாம் என  அவர் கருதியிருக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08