இந்­தி­யாவின் அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்த இரா­ணுவ இரக­சி­யங்­களை அறிந்­து­கொள்ள இங்­கி­லாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உள­வாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநி­லத்தை சேர்ந்த இந்­திய விமா­னப்­படை வீரர் ஒருவர் விழுந்த அதிர்ச்­சி­கர சம்­ப­வத்தில் சில ருசி­கர தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன.

கேரள மாநி­லத்தை சேர்ந்த ரஞ்சித் என்­பவர் இந்­திய விமா­னப்­ப­டையின் தொழில்­நுட்பப் பிரிவில் பணி­யாற்­றி­ய­தோடு, இந்­திய விமா­னப்­படை நிலை­யங்­களில் போர் விமா­னங்­களை பரா­ம­ரித்து, கண்­கா­ணிக்கும் குழுவில் உயர்­பொ­றுப்பு வகித்­து­வந்­துள்ளார். இவ­ருக்கு மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்­கி­லாந்தை சேர்ந்த ஒரு அழ­கிய இளம்பெண் அறி­மு­க­மா­கி­யுள்ளார்.

இங்­கி­லாந்தில் உள்ள பீஸ்டன் பகு­தியில் வசிப்­ப­தா­கவும், புல­னாய்வு பத்­தி­ரி­கையில் பணி­யாற்­றி­வ­ரு­வ­தா­கவும் தன்­னைப்­பற்றி அறி­மு­கப்­ப­டுத்தி கொண்ட அந்­தப்பெண் அடிக்­கடி பேஸ்புக் வாயி­லாக ரஞ்­சித்­துடன் ஆங்­கில மொழி­வா­யி­லாக தொடர்பை ஏற்­ப­டுத்தி அவரை காதல் வலையில் சிக்­க­வைத்­துள்ளார். இதனால் ரஞ்சித் பேஸ்­புக்கே கதி­யென ஆகி­யுள்ளார்.

இதன்­பின்னர் ரஞ்­சித்தின் தொழில் தொடர்­பாக அப்பெண் விசா­ரிக்க தொடங்­கி­யுள்ளார். இதன்­போது போர் பயிற்­சிகள் மற்றும் இந்­திய விமா­னப்­படை விமா­னங்­களின் செயற்­திறன் ஆகி­ய­வற்­றைப்­பற்­றிய முக்­கிய தக­வல்­களை தெரி­வித்த ரஞ்சித் தனது பணி­யைப்­பற்­றிய விப­ரங்கள் அனைத்­தையும் வழங்­கி­ய­தோடு தன்­னு­டைய சில புகைப்­ப­டங்­க­ளையும் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரி­மாற தொடங்­கி­யுள்ளார். பின்னர், இரு­வரும் இணைய அழைப்­பின்­மூலம் பேசிக் கொள்ள தொடங்­கி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து மெது­வாக, தனது திட்­டத்தின் முதல்­காயை அந்த ஐ.எஸ். தீவி­ர­வாத பெண் நகர்த்­தி­யுள்ளார். அதா­வது இந்­திய விமா­னப்­ப­டையில் என்­னென்ன ரக விமா­னங்கள் உள்­ளன? அவற்றின் செயற்­திறன் என்ன? என்­பது தொடர்­பாக ரஞ்­சித்­திடம் ஒரு பேட்­டியை எடுத்த அவர், அதை தான் தொழில் செய்யும் பத்­தி­ரி­கையில் பிர­சு­ரிக்கப் போவ­தாக தெரி­வித்­துள்ளார்.

அடுத்­த­கட்­ட­மாக, குவா­லியர் நகரில் இயங்­கி­வரும் இந்­திய விமா­னப்­ப­டையின் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை அளிக்­கு­மாறு அவர் கேட்க, இந்­திய பாது­காப்பு துறையின் மிக­உ­யர்ந்த இர­க­சிய கூட­மான அந்த திட்­டத்தைப் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட ரஞ்சித் மறுத்­துள்ளார். இதற்­கி­டையே பெல்காம், சென்னை, டில்லி மற்றும் பஞ்­சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்­களில் மாறி­மாறி தொழில் செய்­து­வந்த ரஞ்­சித்தின் இணை­ய­தள நட­வ­டிக்­கை­களை இரா­ணுவ புல­னாய்வு மற்றும் தேசிய பாது­காப்பு முகாமைத்துவ அதி­கா­ரிகள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்க தொடங்­கினர்.

குவா­லியர் நகரில் இயங்­கி­வரும் இந்­திய விமா­னப்­ப­டையின் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடி­வாதம் பிடித்­து­வந்த நிலையில், 'இதற்கு முன்னர் இந்­திய போர் விமா­னங்­களின் தொழில்­நுட்பம் பற்றி பேஸ்­புக்கில் பரி­மா­றிய ரக­சிய தக­வல்கள், அளித்த பேட்­டியின் பதி­வுகள் போன்­ற­வற்றை அம்­ப­லப்­ப­டுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரி­யா­தை­யாக, குவா­லியர் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை எனக்கு தெரி­வித்தே ஆக­வேண்டும்' என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில், ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்தின் முக­வ­ராக பணி­யாற்­றி­வந்த அந்த இங்­கி­லாந்து பெண்­ணு­ட­னான ரஞ்சித்தின் மொத்த தொடர்­பு­க­ளுக்­கான ஆதா­ரங்­களை முழு­மை­யாக சேக­ரித்த இரா­ணுவ புல­னாய்வு மற்றும் டில்லி பொலிஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் பஞ்­சாப்பில் உள்ள பதின்டா விமாப்­ப­டைத்­த­ளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.