திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உறவினர் வீட்டுக்கு சென்றபோது வழியில் மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து இவ்வாறு இவரை கொட்டியுள்ளது.

குளவி கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருந்தும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆறுமுகம் (68) என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.