நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.

 ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 3 ஆம் திகதி   அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளில் நீதியும் உண்மையும் நிலைநாட்ட வேண்டும் என்பதே மக்களின் அபிலாசைகளாக காணப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மாநாட்டிலும் இந்த பரிந்துரைகளே போன்றே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் வகையில்  நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என  மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.