முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவுக்கு வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவருவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. 

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவின் மனைவியின் வேண்டுகோளின் பின்னரே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.