'மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?' :   பதிலளித்தார் மஹிந்த

Published By: MD.Lucias

11 Jan, 2017 | 03:43 PM
image

மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி 

உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்

அரசியில் அமைப்பின் பிரகாரம் தகுதியுள்ள எந்தவொரு நபரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்

கேள்வி

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் மைத்திரிபாலவை எதிர்த்து போட்டியிடுவீர்களா?

பதில்

நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்காலத் தலைவர்களுக்கு இதுவொரு சரியான நேரம் என நினைக்கின்றேன்.

கேள்வி

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் வரவு செலவுத் திட்டங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள் என இது போன்ற பல விடயங்களில் ஏன் பங்கெடுப்பதில்லை.

பதில்

எனக்கு இயலுமான நேரங்களில் பாராளுமன்றுக்கு செல்வேன். மேற்கூறிய விடயங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளில் எனது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளேன்.

கேள்வி

முஸ்லிம் சமூகம் உங்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. நாட்டில் உள்ள கடும்போக்குவாதிகளுக்கு எதிராக உங்களுடைய எதிர்கால ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில்

தற்போதும் எதிர்காலத்திலும் கடும்போக்குவாதிகளுக்கு இடமளிக்கமாட்டோம். நாம் எப்போது நாட்டின் ஒற்றுமைக்காக செயற்படுவோம்.

கேள்வி

சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் நோக்கம் என்ன? சீனாவிடம் நீங்கள் கூறியது என்ன? சீனா உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன?

பதில்

சீனா எப்போது இலங்கையின் நண்பனாக இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவை நாம் மதிக்கின்றோம். மக்களையும் சூழலையும் பாதிக்காத வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாக இருந்தது.

கேள்வி

எட்கா தொடர்பில் உங்களதும், எதிரணியினரினதும் நிலைப்பாடு என்ன?

பதில்

நாம் எப்போது அதற்கு எதிராகவே உள்ளோம். இருக்கும் ஒப்பந்தங்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

கேள்வி

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணுமா?

பதில்

தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் தீர்க்கமானதாக இல்லை.

கேள்வி

எதிர்காலத்தில் உங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நிதி மோசடி விசாரணைப்பிரிவை தொடர்ந்தும் கொண்டு செல்லுமா?

பதில்

நிதி மோசடி விசாரணைப்பிரிவு ஒரு சட்டவிரோத நிறுவனம். இது தொடர்பில் ஆராய்ந்து நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிக்க முடியும் என்றார்.

கேள்வி.

உங்களது அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்குமிடையிலான உண்மையான தொடர்பு என்ன? அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

பதில்

பொதுபல சேன இப்பொழுது யாருடன் இணைந்துள்ளார்கள் என்பதனை தற்போது உங்காளால் தெளிவாக பார்க்க முடியும்

கேள்வி

அம்பாந்தோட்டையில் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிராக இருக்கின்றீர்கள். எனினும் உங்களுடைய ஆட்சியில் சாம்பூர் நிலத்தை வெளிநாட்டு விற்பனை செய்ய ஏன் முடிவெடுத்தீர்கள்?

பதில்

சம்பூர், நுரைச்சோலை போன்ற திட்டங்களை இலங்கை சார்ந்தவையாக இருந்த போதும் இந்தியாவினால் அமைக்கபடவிருந்தன. எனினும் நாம் யாருக்கு நிலத்தை விற்பனை செய்யவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22