வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பிரபலம் கானா உலகநாதன் புதிய படத்தில் காமெடி தாதாவாக நடிக்க உள்ளார்.

மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும்... விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ பாடலை பாடி  பிரபலமானவர் கானா உலக நாதன். படத்தில் வரும் அந்த காட்சியில் அவரே நடித்தார்.

தற்போது ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்ற படத்தில் வடசென்னையை சேர்ந்த காமெடி தாதாவாக நடிக்கிறார்.  ‘வேட்டி-டிஷர்ட் கெட்-அப்பில் புதுமையான ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில்  நடிக்க திட்டமிட்டுள்ளார்.