இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பெஷன் காரணமாகவும், மேலைத்தேய கலாச்சாரத்தின் ஈர்ப்பின் காரணமாகவும் மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அதிலும் வார விடுமுறையினை மதுவில்லாமல் கழிப்பதில்லை. இந்நிலையில் மதுவை அருந்துவதாலும், அதே தருணத்தில் உடல் உழைப்பு போதிய அளவிற்கு இல்லாத காரணத்தினாலும், கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாலும் கல்லீரல், கணையம், பித்தப்பை ஆகியவை பாதிப்படைகின்றன.

முதுகு வலியும் அதிக சோர்வும் யாருக்கு ஏற்படுகிறதோ அவர்களின் கணையம், கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிகுறியாக எடுத்துக கொண்டு உடனடியான மருத்துவர்களை சந்தித்து ஆலோனையும் சிகிச்சையும் பெறவேண்டும். 

ஹெபடைடீஸ் ஏபிஇ ஆகிய வைரஸ்களின் தாக்குதலால் கல்லீரல் பாதிக்கப்படக்கூடும். கல்லீரல் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை அவசியமற்றது. கல்லீரல் பாதிப்பின் நிலையைப் பொறுத்தே கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இன்று வளர்ந்துவிட்ட மருத்துவ தொழில்நுட்பத்தின் காரணமாக கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை என்பது வெற்றியளிக்கும் சத்திர சிகிச்சையாக மாறியிருக்கிறது. இருப்பினும் கல்லீரல் பாதிப்பு வருமுன் பாதுகாப்பதே சிறந்தது.

டொக்டர் விவேகானந்தன் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்