இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியைவிட்டு விலகிய டொனி இங்கிலாந்து பதினொருவர் அணிக்கெதிரான ஒருநாள் பயிற்சி போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை மீண்டும் கைலெடுத்துள்ளார்.

இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டோனி 2 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் அடங்கலாக 40 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 303 ஓட்டங்களை பெற இங்கிலாந்து பதினொருவர் அணி 7 விக்கட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.