கைது செய்யப்பட்ட ஜாலிய விக்ரமசூரியவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கடந்த வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

2005ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் லொஸ் ஏஞ்சல்ஸ{க்கான துணைத்தூதராக இருந்த அவர், பின்னர் அமெரிக்காவுக்கான தூதுவராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

இந்த காலப்பகுதியில், தூதரக காரியாலய சீரமைப்புக்கான ஒப்பந்த வழங்கலுக்காக அவர் 2 இலட்சத்து 45 ஆயிரம் டொலர்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.