பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வத்­திக்­கானில் சிஸ்ரின் தேவா­ல­யத்தில் ஆற்­றிய உரையின் போது,  பெண்கள் தமது குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பா­லூட்­டு­வ­தற்கு தயங்கக் கூடாது என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 பெண்கள் தேவா­ல­யத்தில் தமது குழந்­தை­க­ளுக்கு பாலூட்ட நேரி­டு­கையில் எது­வித அச்­ச­மு­மின்றி சுதந்­தி­ர­மாக அதனை மேற்­கொள்ள வேண்டும் என அவர் தெரி­வித்தார்.

 156  சிறு­வர்­க­ளுக்கும் 13  சிறு­மி­க­ளுக்கும் ஞானஸ்­நானம் வழங்­கிய பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

 “தாய்­மாரே பய­மின்றி தாய்ப்­பா­லூட்­டுங்கள். கன்னி மரியாள் இயேசு பால­கனை பராமரித்தது போன்று உங்கள் குழந்தைகளை பராமரியுங்கள்"  என அவர் கூறினார்.