எனது ஆட்­சிக்­கா­லத்தில் முன்­மொ­ழி­யப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு வரைவில் இன்று முன்­மொ­ழி­யப்­படும் அதி­கார பர­வ­லாக்­கத்தை விட அதி­க­மான அதி­காரப் பகிர்வு  உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. அதனை 67 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான மக்கள் ஆத­ரிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தனர். அன்று முன்­மொ­ழி­யப்­பட்ட தீர்வுத் திட்­டத்­தையே தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டு­வ­ர­வுள்ளார். அன்று எதிர்த்­த­வர்கள் இப்­போது ஆத­ர­வ­ளிக்­கின்­றனர். மனி­தர்­களின் எண்ணம் மாறும், முகம் மாறும் என்­ப­தற்கு இது ஒரு சிறந்த உதா­ர­ண­மாகும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்தார்.

மேலும் நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின்  அறிக்கை சர்­வ­தேச பொறி­மு­றைக்கும் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கும் பரிந்­துரை செய்­துள்ள நிலையில் அது தொடர்­பான இறுதி தீர்­மா­னத்தை அர­சாங்­கமே எடுக்க வேண்டும். குறித்த செய­ல­ணிக்கு பரிந்­துரை  செய்யும் அதி­காரம் இல்­லை­யா­யினும் அதனை நல்­லாட்சி அர­சாங்கம் என்­ப­தி­னா­லேயே கருத்­திற்­கொண்­டுள்­ளது எனவும்  அவர்  குறிப்­பிட்டார். 

கொழும்­பி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­லக கேட்போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களால் எழுப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

உங்­க­ளு­டைய ஆட்­சியல் சிறந்த தீர்வு திட்­ட­மொன்று முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் அதனை ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான எதிர்க்­கட்­சி­யினர் எதிர்த்­தா­கவும் ஆனால்,  இப்­போது அவர்­களின் ஆட்­சியில் தமி­ழ­ருக்கு சிறந்த தீர்வை முன்­வைப்­பார்கள் என எதிர்­பார்ப்­ப­தா­கவும்    எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். அதனை நீங்கள் எப்­படி கரு­து­கின்­றீர்கள்  என ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்­வி­யெ­ழுப்­பினர்.  

 சந்­தி­ரிகா குமா­ர­துங்க மேலும்   தெரி­விக்­கையில்,

எனது ஆட்­சியில் வேண்­டா­மென கூறிய அர­சி­ய­ல­மைப்பு யோச­னை­யையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­போது கொண்­டு­வ­ர­வுள்ளார். அன்று நான் தொடர்ந்தும் ஆட்­சியில் இருந்­து­வி­டுவேன் என்ற பயந்­தனர். ஆனால், இப்­போது அவர்­களை ஆட்­சிக்கு கொண்டு வரவும் , தலைமைப் பத­விக்கு நிய­மிக்­கவும் மற்றும் பிர­தமர் பத­வி­யையும் பெற்­றுக்­கொ­டுக்­கவும் மற்­று­மொ­ரு­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கவும் நான் உத­வி­யுள்ளேன். 

அன்று நான் கூறி­யதை இப்­போது இவர்கள் கூறு­கி­றார்கள்.  இந்­நி­லையில்,  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவம் அடங்­க­லான அந்தக் கட்­சியை சேர்ந்த பலர் இப்­போது  அன்று இதற்கு ஆத­ரவுத் தெரி­வித்­தி­ருக்க வேண்டும் எனக் கூறி தவறை ஏற்­றுக்­கொள்­கின்­றனர்.

நான் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் நல்­லி­ணக்கம் தொடர்­பாக நிகழ்ச்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தேன். 1994 டிசம்பர் முதல் இலங்­கையில் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இதன்­போது அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நல்­லி­ணக்க விட­யங்கள் தொடர்­பாக மக்­க­ளிடம் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் வகையில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை பயன்­ப­டுத்தி கருத்­துக்­க­ணிப்பு ஒன்­றையும் நடத்­தி­யி­ருந்தோம். 

இதன்­போது 23.3 வீத­மான சிங்­கள மக்­களே யுத்­தத்தை நிறுத்தி பேச்­சுகள் நடத்தி அர­சியல் தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென கூறி­யி­ருந்­தனர். மக்­க­ளி­டையே தெளி­வு­ப­டுத்தல் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வெண் தாமரை இயக்­கத்தை ஆரம்­பித்து அதனை முன்­னெ­டுத்தோம். அந்தக் காலப்­ப­கு­தியில் எமது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் வரைபும் மக்­க­ளிடம் கொண்டு செல்­லப்­பட்­டது. இதன்­பின்னர் 67 வீதத்­திற்கும் அதி­க­மான சிங்­கள மக்கள் அதற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தனர். அதில் அதி­காரப் பகிர்வு தொடர்­பா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இப்­போது இருப்­ப­தனை விடவும் விரி­வான அதி­காரப் பகிர்வு இருந்­தது.

எவ்­வா­றா­யினும் அன்று அடிப்­ப­டை­வா­திகள் இருக்­க­வில்லை. ஆனால்,  பின்னர் அடிப்­ப­டை­வாதி தலை­வ­ரா­னதால் அந்த நிலைமை மாறி­யுள்­ளது. எவ்­வா­றா­யினும் சரி­யாக மக்­க­ளி­டையே தெளி­வுப்­ப­டுத்­தல்கள் காணப்­ப­டு­மாயின் எத­னையும் சிறப்­பாக முன்­னெ­டுக்க முடியும்.

கேள்வி: ரவிராஜ் கொலை­வ­ழக்கில் வழங்­கப்­பட்ட தீர்ப்பு தொடர்பில் விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே? உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: நீதி­மன்ற தீர்ப்பை விமர்­சிக்க முடி­யாது.  ஆனாலும் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் உள்­ள­வர்கள் நேர்­மை­யற்­ற­வர்கள் என்­ப­துவும் அப்­போது நீதித்­துறை அர­சி­யல்­ம­ய­மாக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் உண்மை. அதன் கார­ண­மாக சில விட­யங்கள் தொடர்பில் சந்­தே­கிக்க முடியும்.

கேள்வி: நல்­லி­ணக்க பொறி­முறை குறித்த கலந்­தா­லோ­சனைச் செய­ல­ணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்­கையில்  யுத்த குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளு­ட­னான விசா­ரணை பொறி­முறை அவ­சியம் என கூறப்­பட்­டுள்­ளதே? இது தொடர்பில் அர­சாங்­கத்­த­ரப்பில் உள்ள அனை­வரும் எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளனர். அது தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்பில் ஜனா­தி­ப­தியும் பிர­மரும் எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளனர். ஆனால் அது தொடர்­பான தீர்­மா­னத்தை அவர்­கள்தான் எடுக்க வேண்டும். சில அமைச்சர்கள் இவ்வறிக்கையை விமர்சிப்பதுவும் நகைப்பாக உள்ளது. இவ்வறிக்கை எம்மால் தயாரிக்கப்பட்டது அல்ல. யுத்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களுக்கான தீர்வை விட அவ்வறிக்கையில் பல விடயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக காணாமலாக்கப்பட்டோர் விடயம், அம்மக்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. குறித்த செயலணிக்கு பரிந்துரை  செய்யும் அதிகாரம் இல்லையாயினும் அதனை நல்லாட்சி அரசாங்கம் என்பதினாலேயே கருத்திற்கொண்டுள்ளது. ஆனாலும் அந்த பரிந்துரைகள் தொடர்பில் கருத்திற்கொள்வதா இல்லையா என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என்றார்.