ஹிரு­ணிகா குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டாலும் அர­சாங்கம் அவரை பாது­காக்­கவே முயற்­சிக்கும் 

31 Dec, 2015 | 09:22 AM
image

தெமட்­ட­கொ­டையில் அண்­மையில் இடம் பெற்ற கடத்தல் சம்­பவம் தொடர்பில் ஹிரு­ணிகா முன்­வந்து தமது குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டாலும் அவரை குற்­ற­வா­ளி­யாக்க அர­சாங்கம் விரும்­ப­வில்­லை­யென பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில குற்றம் சாட்­டினார்.

ஹிரு­ணி­காவை கைது செய்­வ­தற்­கான சாட்­சி­யங்கள் இல்­லை­யென கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு விடுத்­துள்ள அறிக்கை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தெமட்­ட­கொடை மேம்­பா­லத் திற்கு அண்­மையில் அமைந்­துள்ள ஆடை விற்­பனை நிலையம் ஒன்றில் அத்­து­மீறி நுழைந்து அங்கு சேவை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த இளைஞர் ஒரு­வரை கடத்திச் சென்று தாக்­கிய சம்­பவம் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் அது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் மூல­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­தி­ர­வுக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டது.

அதன் பின்னர் சம்­பவம் நடந்த இடத்தில் திரட்­டப்­பட்ட சீ.சீ.டீ.வி காணொ­ளிகள் வாயி­லாக ஹிரு­ணி­காவின் சகோ­தரர் உள்­ளிட்ட 6 பேர் அடங்­கிய குழு­வொன்றே குறித்த இளை­ஞரை கடத்திச் சென்று தாக்­கி­ய­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதன் பின்னர் குறித்த சம்­பவம் தொடர்பில் ஹிரு­ணி­கா­விடம் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு வாக்­கு­மூலம் பதிவு செய்த போது அவர் தனக்குச் சொந்­த­மான டிபெண்டர் வாகனம் தான் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்றும் தாம் கடத்திச் சென்­றது உண்மை ஆனால் இளை­ஞரை தாக்­க­வில்லை என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் குடும்ப பிரச்­சினை ஒன்றின் கார­ண­மா­கவே குறித்த இளை­ஞரை கடத்திச் சென்­ற­தா­கவும் ஒப்­பு­ கொண்­டி­ருந்தார்.

ஆனால் அவர் ஒப்­புக்­கொண்­டதன் பின்­னரும் குற்­றத்­த­டுப்பு பிரிவு ஹிரு­ணி­காவை கைது செய்­வ­தற்­கான போதிய சாட்­சி­யங்கள் இல்லை என தெரி­வித்­துள்­ளமை வேடிக்­கை­யான விடயம்.

இந்த விட­யத்தின் பின்­ன­ணியில் அர­சியல் கார­ணிகள் இருக்­கின்­றமை குறித்து நாம் அறி­யா­த­தல்ல. அதனால் இந்த விட­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணி­காவை அர­சாங்கம் பாது­காக்க முயற்­சிக்­கின்­றது என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்நிலையில் கடந்த காலங்களில் என்னைப்பற்றி ஹிருணிகா அவதூறு பேசியமை க்காக 500 மில் லியன் ரூபா நஷ்டயீடு கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள் ளேன் அதிலும் எனக்கு நியாயமான தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறி­னார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08