ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான Huawei Smartphone விற்பனை இலக்கைக் கடந்த சிங்கர்

Published By: Priyatharshan

10 Jan, 2017 | 02:43 PM
image

இலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு திறன்பேசி வர்த்தகநாமமான Huawei, தனது Huawei திறன்பேசிகளுக்கான பிரத்தியேக தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் 2016 டிசம்பர் மாதத்தில் மட்டும் Huawei திறன்பேசிகளின் விற்பனை மூலமாக 1 பில்லியன் தொகையை வெற்றிகரமாகக் கடந்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் நவீன மற்றும் நம்பிக்கைமிக்க வர்த்தகநாமமாகத் திகழ்ந்துவருகின்ற Huawei சிங்கருடன் இணைந்து, பல்வேறு புத்தம்புதிய மற்றும் புத்தாக்கமான திறன்பேசிகள் மற்றும் tablet சாதனங்களின் அறிமுகம் மற்றும் தீவிரமான சந்தைப்படுத்தல் முன்னெடுப்புக்கள் மூலமாக தனது விற்பனையை மேம்படுத்தியுள்ளது.

உயர் தொழில்நுட்பம் கொண்ட திறன்பேசிகளை விரும்பும் பாவனையாளர்களை இலக்காகக் கொண்டு Leica இணை பொறியமைப்பு இரட்டை கமரா திறன்பேசியாக அறிமுகமான அதிநவீன Huawei P9 மற்றும் P9 Lite, நடுத்தர வகை GR வர்க்கத்தில் வெளிவந்த GR5, GR5 Mini, GR5 2017 மற்றும் அடிப்படை 4G திறன்பேசிகளாக வெளிவந்த Y6PRO, Y6II, Y5II ஆகியன நாட்டில் திறன்பேசி ஆர்வலர்கள் மத்தியில் Huawei இன் வர்த்தகநாமத் தோற்றத்தை அதிகரிக்க உதவியுள்ளன.

இந்த பெறுபேறு தொடர்பில் மிகுந்த உற்சாகத்துடன் தனது கருத்தினைப் பகிர்ந்துகொண்ட சிங்கர் ஸ்ரீலங்கா குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ்,

 “Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனை இலக்காகும். இந்த உன்னதமான இலக்கினை அடைந்துகொள்வதற்கு தமது தொடர்ச்சியான கவனத்தையும்ரூபவ் அர்ப்பணிப்பையும் காண்பித்த ஒட்டுமொத்த அணியையும் நான் பாராட்டுகின்றேன். பிரத்தியேக விநியோகத்தர்களாக சிங்கர் ஸ்ரீலங்கா பங்குடமையை ஏற்படுத்திய காலம் முதற்கொண்டு எமது இலக்குகளை அடைந்துகொள்வதற்கு தனது பூரண ஆதரவை Huawei எமக்கு வழங்கியுள்ளது. 

இப்புதிய ஆண்டில் Huawei இனை முதலாவது ஸ்தானத்தில் திகழச் செய்யவேண்டும் என்ற இலக்குடன் தொழிற்படுகின்ற நாம், விற்பனையைப் பொறுத்தவரையில் இதைவிட இன்னும் அதிகமான இலக்கினை அடையவேண்டும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

தற்போதைய உற்பத்தி வரிசை மற்றும் திறன்மிக்க விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் ஆகியவற்றினூடாக 2016 ஆம் ஆண்டில் Huawei தொடர்பில் கொண்டிருந்த விற்பனை இலக்கினை சிங்கர் சிறப்பாக அடையப்பெற்றுள்ளது. Huaweiவர்த்தகநாமத்தை மக்கள் மத்தியில் அதிகமாக எட்டச் செய்வதை இலக்காகக் கொண்ட சிங்கர் டிஜிட்டல் ஊடக மார்க்கம் போன்ற விரிவான விநியோக மூலோபாயங்கள் சந்தையில் வினைதிறன் மிக்க வழியில் நிர்வகிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு முகாமையாளரான ஹென்றி லியு, இந்த சாதனை தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“ஒரு திறன்பேசி வர்த்தகநாமமாக இலங்கையில் நாம் கால்பதித்தமை முதற்கொண்டு முன்னிலை வகிக்கும் ஒரு சர்வதேச வர்த்தகநாமம் என்ற உணர்வுடன் நவீன தொழில்நுட்பத்தில் முன்னோடியாக Huawei இனங்காணப்பட்டுள்ளது. 

இலங்கையில் திறன்பேசி பாவனையாளர்கள் உலகெங்கிலுமுள்ள தொழில்நுட்பப் போக்குகளை உள்வாங்கிவரும் நிலையில், புத்தாக்கமான மற்றும் தரமான உற்பத்திகள் தொடர்பில் அதிகளவான அறிவையும் பெற்றுக்கொள்கின்றனர். 

நாடெங்கிலுமுள்ள எமது பெறுமதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு Huawei இன் புத்தாக்கத்தை எடுத்துச்செல்வதில், சிங்கர் ஸ்ரீலங்கா ஒரு உள்ளங்கமாகவே தொழிற்பட்டு வருகின்றது. உள்நாட்டில் உயர் தொழில்நுட்ப மட்ட திறன்பேசி சந்தையில் Huaweiகணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. 

2016 டிசம்பரில் இலங்கையில் 500 இற்கும் மேற்பட்ட P9 திறன்பேசிகளை விற்பனை செய்ய எம்மால் முடிந்துள்ளதுடன் அது பாராட்டத்தக்க ஒரு பெறுபேறாகும்” என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேசரீதியாக 10 மில்லியனுக்கும் அதிகமான P9/P9 Lite திறன்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் 10 மில்லியன் என்ற இலக்கினை அடையப்பெற்ற நிறுவனத்தின் முதலாவது பிரதான உற்பத்தி வரிசையாகவும் அது மாறியுள்ளது. ஒரு உற்பத்தி மற்றும் வர்த்தகநாமம் என்ற இரு கோணங்களிலும் இது Huawei இனைப் பொறுத்தவரையில் ஒரு சாதனை இலக்காகும். உயர் மதிப்பு கொண்ட பிரிவில் Huawei P9 மற்றும் P9 Lite சாதனங்கள் மெச்சத்தக்க பெறுபேறுகளை அடையப்பெற்றுள்ளதுடன் சர்வதேச சந்தைகளில் Huawei இன் முதலீடு பலனளித்துள்ளது என்பதையும் காண்பிக்கின்றது.

முன்னிலை வகிக்கும் தொழில்நுட்ப அறிமுகங்கள் அனைத்தையும் உள்வாங்கி உயர் மட்டத்திலிருந்து, அடிப்படை மட்ட நுகர்வோர் வரை அனைத்து வகையான வரவுசெலவுத் திட்டங்களுக்கும் கிடைக்கப்பெற்றும் வகையில் Huawei தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. 

இலங்கையில் Huawei திறன்பேசியை சொந்தமாக்கிக் கொள்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை மக்கள் மத்தியில் விழிப்புணரச்

செய்வதில் சிங்கர் பெரும்பங்கு வகித்துள்ளதுடன் கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் தனது விநியோக கிளையமைப்பை நீட்டித்துள்ளது. மேல் மாகாணத்தில் விற்பனை மிகச் சிறந்த பெறுபேறுகளைக் காண்பித்துள்ளதுடன் கம்பஹா, கண்டி மற்றும் காலி போன்ற நகரங்களில் நுகர்வோர் மத்தியில் முன்னிலை வகிக்கும் ஒரு சிறந்த வர்த்தகநாமமாகவும் அது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Huawei வர்த்தகநாமம் தொடர்பான சர்வதேச அளவிலான விழிப்புணர்வும், Huawei இன் மிகச் சிறந்த சந்தை பெறுபேற்றுடன் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 2016 இல் Interbrand வெளியிட்டுள்ள “மிகவும் பெறுமதிமிக்க 100” சர்வதேச வர்த்தகநாமங்களின் பட்டியலில் 72 ஆவது ஸ்தானத்தில் Huawei உள்ளது. 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 ஸ்தானங்கள் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் Brand Z வெளியிட்டுள்ள முதல் 100 இடங்களிலுள்ள பெறுமதிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில், இந்த ஆண்டு 50 ஆவது ஸ்தானத்தில் Huawei உள்ளதுடன் அது 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட 70 ஆவது ஸ்தானத்திலிருந்து முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் GfK இன் நுகர்வோர் கருத்துக்கணிப்பின் மூலமாக “மிகச் சிறந்த வர்த்தகநாமங்கள் 2016 - சீன வர்த்தகநாம தரப்படுத்தல்” பட்டியலில் “மிகச் சிறந்த நுகர்வோர் இலத்திரனியல் வர்த்தகநாமம்” என்றும் Huawei பெயரிடப்பட்டுள்ளது. GfK இன் ஆராய்ச்சியின் பிரகாரம் Huawei இலங்கையில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58