முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா மல்வானை கங்கபட வீதியில் அமைந்துள்ள வீட்டின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மல்வானை பகுதியில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி குற்றத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.