தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்தில் என்னால் ஒரு­போதும் இணைந்து கொள்ள முடி­யாது. எனக்கு மிகப் பெரிய அமைச்சுப்பத­வி­யொன்றை வழங்க அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் விரும்­பு­கின்­றனர். ஆனால் அதனை பொறுப்­பேற்க நான் தயாரில்லை. என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கண்டி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லி­ய ­ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்கா கொண்­டு­வந்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த முடி­வா­னது எந்­த­வ­கை­யிலும் பொருத்­த­மற்­ற­தாகும். இந்த விட­யத்தில் அர­சாங்கம் மிகப்­பெ­ரிய தவறை இழைத்­துள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் எதி­ர­ணியில் இருக்­கின்ற சில உறுப்­பி­னர்கள் விரைவில் அர­சாங்­கத்­துடன் இணைந்துகொள்­ள­வுள்­ள­தாகத் தெரி­விக்­கின்­றமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

கெஹெ­லி­ய­ ரம்புக்­வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

அர­சாங்கம் பாரிய குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வ­ரான குழப்­ப­க­ர­மான வர­வு-­

–செ­லவுத் திட்­ட­மொன்றை அர­சாங்கம் முன்­வைத்­தது. இந்த வர­வு–செ­ல­வுத்­திட்­டத்­திற்கு எதி­ராக விவ­சா­யிகள், வைத்­தி­யர்கள், துறைசார் நிபு­ணர்கள், தொழில்சார் வல்­லு­நர்கள், அரச ஊழி­யர்கள் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­னரும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். இது­போன்­ற­தொரு குழப்­ப­க­ர­மான வர­வு –செ­லவுத் திட்டம் இதற்கு முன்னர் வந்­த­தில்லை.

அடுத்­த­தாக இந்­தி­யா­வுடன் சீபா என்ற வர்த்­தக உடன்­ப­டிக்­கையை பெயரை மாற்­றி­விட்டு கைச்­சாத்­தி­டு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. இதனால் எமது நாட்டின் பொரு­ளா­தாரம் சிக்­க­லுக்­குள்­ளாகும்.

இதே­வேளை, ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்கா கொண்­டு­வந்த பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த முடி­வா­னது எந்­த­வ­கை­யிலும் பொருத்­த­மற்­ற­தாகும். இந்த விட­யத்தில் அர­சாங்கம் மிகப்­பெ­ரிய தவறை இழைத்­துள்­ளது. தற்­போது அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணைக்கு அமை­வாக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாயின் அதில் வெளி­நாட்டு நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள், வழக்­க­றி­ஞர்கள், உட்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு செய்­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

எக்­கா­ரணம் கொண்டும் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளையும் வழக்­க­றி­ஞர்­க­ளையும் இலங்­கையின் விசா­ரணைச் செயற்­பா­டு­களில் உள்­ளீர்க்கக் கூடாது. அந்த வகையில் பார்க்கும் போது அமெ­ரிக்கப் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­யதன் மூலம் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை இலங்­கைக்கு வர­வ­ழைக்க முயற்­சிக்­கின்­றமை உறு­தி­யா­கின்­றது. இதனை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது இவ்வாறான தீர்க்கதரிசனமற்ற அரசாங்கத்தில் என்னால் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது. எனக்கு மிகப் பெரிய அமைச்சுப் பதவியொன்றை வழங்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதனைப் பொறுப்பேற்க நான் தயாரில்லை. இந்த அரசாங்கத்தில் நாங்கள் ஒருபோதும் இணைந்து செயற்பட முடியாது என்றார்.