புகைத்தலால் உண்டாகும் பாரதூரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய விளம்பரப் பதாகையொன்றை ஸ்வீடனின் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

ஒரு இளைஞனின் தலையும் கழுத்தும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த இலத்திரனியல் திரையுடன், புகையை உணரும் சென்ஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பதாகை அருகே எவரும் புகைத்தால், உடனே திரையில் தெரியும் இளைஞர் பலமாக இருமுகிறார்.

புகைப்பவர்கள் பெருமளவில் வந்து செல்லும் இடத்தைக் கண்டறிந்து பொருத்தப்பட்டிருப்பதால் இந்த விளம்பரப் பதாகைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

எனினும், இதை ஒரு விளையாட்டாக மட்டுமே மக்கள் பார்க்கிறார்கள் என்றும், இதனால் விழிப்புணர்வு ஏற்படும் என்பது சந்தேகமே என்றும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.