தொகை­ம­திப்புப் புள்­ளி­வி­பரத் திணைக்­க­ளத்தின் தற்­கா­லிக மதிப்­பீ­டு­க­ளின்டி, 2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்­டுப்­ப­கு­தியில் இலங்­கையின் பொரு­ளா­தாரம்  4.1 சத­வீ­தத்­தினால் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2016 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகு­தியில் பணிகள் துறை 4.7 சத­வீ­தத்­தினால் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள வேளையில் கைத்­தொழில் நட­வ­டிக்­கைகள் 6.8 சத­வீதம் கொண்ட குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியைப் பதி­வு­செய்­துள்­ளன. 

எனினும் வேளாண்­மை­யுடன் தொடர்­பான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்து இரண்­டா­வது காலாண்­டாக சுருக்­கத்­தினைப் பதிவு செய்து 1.9 சத­வீ­தத்­தினால் குறை­வ­டைந்­துள்­ளது. இதற்கு 2016 ஆம் ஆண்டின்  மூன்றாம் காலாண்டில் நில­விய மோச­மான வானிலை நி­லைமை­களின் தாக்­கமே கார­ண­மாக அமைந்­துள்­ளன.

முன்­னணிப் பொரு­ளா­தார குறி­காட்­டி­களில் காணப்­பட்ட சாத­க­மான அபி­வி­ருத்­திகள் அதேபோன்று 2015 ஆம் ஆண்டில் நான்காம் காலாண்டில் காணப்­பட்ட தாழ்ந்­த­தளம் என்­பன, மோச­மான வானிலை நிலைமைகள் மற்றும் உல­க­ளா­விய பொரு­ளா­தா­ரத்தின் நிச்­ச­ய­மற்ற தன்மை என்­ப­ன­வற்­றிற்கு மத்­தி­யிலும் 2016இன் நான்காம் காலாண்டில் பொரு­ளா­தா­ரத்தின் மேல்­நோக்­கிய வளர்ச்­சிக்கு வழி­காட்­டின.

அத்­துடன் கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணினால் அள­வி­டப்­பட்­ட­வா­றான முதன்மைப் பண­வீக்கம் ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில் 2016 நவம்பர் மாதத்தில் 3.4 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 டிசம்பர் மாதத்தில் 4.1 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­தது.

நவம்பர் மாதத்தில், தேசிய நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணினால் அள­வி­டப்­பட்­ட­வா­றான முதன்மைப் பண­வீக்கம் குறிப்­பி­டத்­தக்­க­ள­விற்கு அதி­க­ரித்து அர­சாங்­கத்தின் பரி­மாற்­றல்­களை பிர­தி­ப­லித்­தது. இதன் விளை­வாக கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணின்­படி மையப்­ப­ண­வீக்கம் (ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில்) 2016 நவம்பர் மாதத்தில்  5.1 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 டிசம்பர் மாதத்தில் 6.3 சத­வீ­தத்­திற்கு விரி­வ­டைந்த வேளையில் நுகர்வோர் விலைச்­சுட்­டெண்­ணினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மையப்­ப­ண­வீக்கம் 2016 ஒக்­டோபர் மாதத்தில் 5.7 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 நவம்பர் மாதத்தில்  6.8 சத­வீ­தத்­திற்கு குறிப்­பி­டத்­தக்­க­ள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.

நாணயத் துறையில் வர்த்தக வங்­கி­க­ளினால் தனியார் துறை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட கொடு­க­ட­ன் வீழ்ச்­சியைக் காட்­டி­ய­துடன் முன்­னைய மாதத்தின் 25.6 சத­வீ­தத்­துடன் ஒப்பிடு­கையில் 2016 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதத்தில் 22.0 சத­வீ­தத்­திற்கு வீழ்ச்­சி­ய­டைந்­தது.

 எனினும், உண்­மை­யான நிய­தி­களில் தனியார் துறைக்கு வழங்­கப்­பட்ட கொடு­க­டனில் காணப்­பட்ட தேறிய வளர்ச்சி 2016 ஆம் ஆண்டு  ஒக்டோபர் மாதத்தில் ரூ.79.0 பில்­லி­யனில் உயர்­மட்­டத்தில் காணப்­பட்­டது. 

அதே­வே­ளையில்,வர்த்­தக வங்­கி­க­ளி­லி­ருந்து அரச துறைக்கு கிடைத்த கொடு­கடன் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மித­மாக அதி­க­ரித்­தது. இதன்­படி, விரிந்த பணத்தின் வளர்ச்சி ஆண்­டிற்கு ஆண்டு அடிப்படையில், 2016 செப்டம்­பரின் 18.4 சத­வீ­தத்­தி­லி­ருந்து ஒக்டோபர் மாதத்தில்17.8 சத­வீ­தத்­திற்கு வீழ்ச்­சி­ய­டைந்­தது.