சீனா­வு­ட­னான ஒப்­பந்தம் நிறுத்­தப்­ப­டு­மாயின் நாட்டு மக்கள் மீது வரிச்­சு­மையை அதி­க­ரிக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டு­மென உயர்­கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

மேலும் சீனா­விற்கு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை வழங்­கு­வதால் நாட்­டிற்கு 1.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் கிடைக்கும். வெறு­மனே பொறா­மைப்­பட்டு நாட்டு மக்­களை பழி வாங்க நினைக்கும் கூட்டு எதி­ரி­ணி­யினர் மக்கள் மீது வரிச்­சு­மையை அதி­க­ரிக்க விரும்­பு­கின்­ற­னரா எனவும் அவர்   கேள்­வி­யெ­ழுப்­பினார்.

கண்­டியில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பங்­கேற்ற பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

சீனா­விற்கு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை வழங்­கு­வதால் நாட்­டிற்கு 1.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் கிடைக்கும். அதனை மறுக்க முடி­யாது. நாட்டின் அபி­வி­ருத்­திக்­கென தீர்க்­க­மான சில முடி­வு­களை எடுத்தே ஆக வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ காலத்தில் ஒரு தொழிற்­சா­லை­யை­யேனும் அமைத்­துக்­கொள்ள முடி­யா­மற்­போ­னது. 

ரண­சிங்க பிரே­ம­தாஸ காலத்தில் திறந்து வைக்­கப்­பட்ட 300 தொழிற்­சா­லை­களில் 150 தொழிற்­சா­லைகள்  மூடப்­பட்­டுள்­ளன. ஒரு இலட்சம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தாக சீனத் தூதுவர் குறிப்­பிட்­டுள்ளார். அம்­பாந்­தோட்­டையில் மாத்­தி­ர­மல்ல, மொண­ரா­கலை, காலி மற்றும் மாத்­த­றை­யிலும் காணி­களை வழங்­க­வுள்ளோம். தொழில்­வாய்ப்­புகள் உரு­வா­வ­தற்கு எதி­ராக ஏன் செயற்­ப­டு­கின்­றார்கள்.? சீன நிறு­வ­னத்­திற்கு அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை வழங்­கு­வதால் 1.1 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் கிடைக்கும். இந்த நிதியை சீனா­வி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளா­விட்டால் வரியை அதி­க­ரிக்க வேண்டி ஏற்­படும். வற் வரி­யையும், அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலையை அதி­க­ரிக்க வேண்டி ஏற்­படும்.

ஆகவே வரிச்­சு­மையை அதி­க­ரிக்­கா­ம­லி­ருக்க வெளி­நாட்டு நிதியை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. சீனா­வி­ட­மி­ருந்து 1.1 பில்­லி­யன்­களை பெற்­றுக்­கொள்­ளாமல் மக்கள் மீது வரிச்­சு­மையை அதி­க­ரிக்­கு­மாறா கூட்டு எதிர்க்­கட்சி கேட்­கின்­றது? இதற்கு பதில் வேண்டும். பொறா­மையில் செய்யும் விட­யமே இது­வாகும்.

ஒப்­பந்தம் தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­று­கின்­றன. அது தொடர்பில் பாரா­ளு­மன்றின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­படும். அவர்கள் இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள்.  அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமானவற்றை செய்தே ஆக வேண்டும். அதனை பொறாமைக்கண்ணோடு பார்ப்பதால் நமது நாட்டு மக்களுக்கே பாதிப்பு ஏற்படும் என்றார்.