"தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறு­வ­தாகும்" :மஹிந்த தேசப்­பி­ரிய

Published By: Raam

10 Jan, 2017 | 10:25 AM
image

உள்­ளூ­ராட்சி  சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும். ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை இப்­போ­தைக்கு சாத்­தி­ய­மில்­லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை கொண்­டு­வரும் சாத்­தியம் உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில்  நேற்று நடை­பெற்ற கரு­த­ரங்கின் பின்னர்  உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தும் காலம் மற்றும் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையின் சாத்­தி­யத்­தன்மை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், 

தேர்தல் வாக்­கெ­டுப்பின் போது இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது  தொடர்பில் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. எனினும் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. அதற்­கான சாத்­தி­யங்கள் இல்லை. காரணம் என்­ன­வெனில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறைமை முதன்­மு­றை­யாக நடை­மு­றைப்­ப­டுத்தும் நிலையில் அதை சரி­யான முறையில் எவ்­வாறு கையாள்­வது என்­பது தொடர்பில் ஆராய வேண்டும். 

அதேபோல் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையில் மக்கள் நம்­பிக்கை கொள்ள வேண்டும். நவீன தொழி­நுட்ப முறைமை மீது மக்­க­ளுக்­கான நம்­பிக்­கையை பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதேபோல் ஒரே தட­வையில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மையை நடை­மு­றைப்­ப­டுத்த இய­லாது. பரிட்­சார்த்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். 

மாதிரி தேர்தல் ஒன்றை நடத்தி அல்­லது குறிப்­பிட்ட ஒரு­சில பகு­தி­யி­லா­வது இந்த முறை­மை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி பார்க்க வேண்டும். எனினும் இப்­போது இருக்கும் நவீன யுகத்தில் இவ்­வா­றான நகர்­வுகள் சகல நாடு­க­ளிலும் விரை­வாக பிர­சித்­தி­பெற்று வரு­கின்­றன. இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இந்த தேர்­தல்­களில் இலத்­தி­ர­னியல் வாக்­கெ­டுப்பு முறை­மைகள் கொண்­டு­வ­ரப்­ப­டாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இலங்­கையில் இலத்­தி­ர­னியல் முறை­மைகள் கையா­ளப்­படும் சாத்­தி­யங்கள் உள்­ளன. 

மேலும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்த வேண்டும் என சகல அர­சியல் கட்­சி­களும் கூறு­கின்­றன . தினமும் ஒரு கட்­சி­யேனும் தேர்­தல்கள் திணைக்­களம்  வந்த வண்­ணமே உள்­ளன. எனினும் இவர்கள் எம்­மிடம் வந்து வலி­யு­றுத்­தி­னாலும் தேர்­தலை நடத்தும் அதி­காரம் எம்­மிடம் இல்லை. மக்கள் வரம்­பெற்ற பாரா­ளு­மன்­றமே தேர்­தலை எப்­போது நடத்­து­வது என தீர்­மா­னிக்க வேண்டும். 

 பாரா­ளு­மன்றம் அந்த அதி­கா­ரத்தை உள்­ளூ­ராட்சி சபைகள் மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்­சிடம்  ஒப்­ப­டைத்­துள்­ளது. ஆகவே அமைச்சர் தான் தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் தீர்­மா­னிக்க வேண்டும்.  அவ்­வாறு இருக்­கையில் தேர்­தல்கள் ஆணை­ய­கத்­துக்கு தேர்­தலை நடத்தும் அதி­காரம் இல்லை. சுயா­தீன ஆணைக்­குழு என்­றாலும் தேர்­தலை நடத்தும் அதி­காரம் எமக்கு இல்லை. உலகில் எந்­த­வொரு தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திற்கும் அந்த அதி­காரம் வழங்­கப்­ப­ட­வி்­லலை.  

ஆனால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும். குறித்த காலத்தினுள்   அரசாங்கம் தேர்தலை நடத்தாது உள்ளதை நாமும் விரும்பவில்லை. வெகு விரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். காலத்தை கடத்தி ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59