சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த லொறி ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் டயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,இதன்போது யாழ்_பருத்தித்துறை  வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை,மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லொறி வாகன சாரதி கைதுசெய்யப்படதாக தெரிவிக்கப்படுகிறது.லொறியில் வந்த மிகுதி பேர் தப்பியோடிதாக தெரிவிக்கப்படுகின்றது.