பாலியல் அடிமைகள் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய மதகுரு தீக்குளிப்பு

Published By: Raam

09 Jan, 2017 | 05:35 PM
image

தென் கொரி­யா­வா­னது இரண்டாம் உலகப் போர் கால­கட்­டத்தில் ஜப்­பானால் பாலியல் அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்ட பெண்கள் தொடர்பில் அந்­நாட்­டுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தென் கொரிய பௌத்த மத­குரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.  

குறிப்­பிட்ட 64 வயது மத­குரு சனிக்­கி­ழமை இரவு மத்­திய சியோலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் முன்­னி­லையில் தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­த­வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  இதனால் கடும் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கிய நிலையில் சியோல் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், உயி­ருக்­கா­கப் போராடிக் கொண்­டி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

சியோல் நகரில் அந்­நாட்டு ஜனா­தி­ப­திக்கு எதிர்ப்புத் தெரி­வித்து 11 ஆவது வார­மாக சனிக்­கி­ழமை எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன  

ஜப்­பா­னுடன் மேற்­படி பாலியல் அடி­மைகள் தொடர்பில் இழப்­பீட்டு முன்­னேற்­பாட்டு உடன்­ப­டிக்­கை­யொன்றை கடந்த ஆண்டு செய்து கொண்­டதன் மூலம் ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை இராஜத் துரோ­க­மொன்றை இழைத்­துள்­ள­தாக தீக்­கு­ளித்த மத­குரு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.  

மேற்­படி கொரிய பெண்கள், ஜப்­பா­னிய போர் கால இரா­ணுவ விப­சார விடு­தி­களில் பணி­யாற்ற அந்­நாட்டு இரா­ணு­வத்­தி­னரால் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்­தனர்.  

இந்­நி­லையில் கடந்த ஆண்டு இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் ஜப்பான் நஷ்­ட­ஈட்டை வழங்கி மன்­னிப்பைக் கோரு­வதன் மூலம் அந்தப் பிரச்­சினை தொடர்­பான குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டது.  

மேற்­படி உடன்­ப­டிக்கை ஜப்­பானால் போர் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றங்­க­ளுக்­காக அந்­நாட்டை பொறுப்புக் கூற­வைப்­ப­தற்கு போது­மா­ன­தாக இல்லை என அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.  

பாலியல் அடிமைகள் தொடர்பான மேற்படி சர்ச்சையின் அங்கமாக தென் கொரியாவிலிருந்து தனது தூதுவரை ஜப்பான் கடந்த வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றதையடுத்து இரு நாடுகளுக்கு மிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21