தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான முத­லா­வது போட்­டியில் இங்­கி­லாந்து அணி 241ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றுள்­ளது.

இரு அணி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்டி டேர்­பனில் நடை­பெற்­றது. நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து முதல் இன்­னிங்ஸில் 303 ஓட்­டங்­க­ளையும் தென் ஆபி­ரிக்கா 214 ஓட்­டங்­க­ளையும் எடுத்­தன. 89 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் 2ஆவது இன்­னிங்ஸை ஆரம்­பித்த இங்­கி­லாந்து சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 326ஓட்­டங்­களை குவித்­தது. அதி­க­பட்­ச­மாக பெரிஸ்ரோவ் 79 ஓட்­டங்­க­ளையும் ஜோ ரூட் 73 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

இதை­ய­டுத்து 416 ஓட்­டங்கள் வெற்­றி­யி­லக்­குடன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த தென்­ஆபி­ரிக்கா சீரான இடை­வெ­ளியில் விக்­கெட்­டு­களை இழந்து தடு­மா­றி­யது. அவ்­வ­ணியின் எல்கர்(40), வான் ஷயல்(33), அம்லா(12), டூ பிளசிஸ்(9) ஆகியோர் அடுத்­த­டுத்து அரங்கு திரும்­பவும் நான்காம் நாள் நிறைவில் 4 விக்­கெட்­டு­களை இழந்து 136 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது.

நேற்று இறு­திநாள் ஆட்டம் நடை­பெற்­றது. 37ஓட்­டங்­க­ளு­ட­னி­ருந்த டிவில்­லியர்ஸ் முதல் ஓவ­ரி­லேயே அலி பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். அதன்­பின்னர் டுமினி நிதா­ன­மாக ஆடிய போதும் மறு­மு­னையில் விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து இழக்­கப்­பட்­டன.

ஈற்றில் தென்­ஆ­பி­ரிக்கா சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 174 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. டுமினி 26 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார். இப்­போட்­டியில் மொத்­த­மாக ஏழு விக்­கெட்­டுக்­களை வீழ்த்திய மொஸின் அலி ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம், 4 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1–-0 என முன்னிலை பெற்றுள்ளது.