எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டில் நாடு முழு­வ­து­முள்ள தமிழ்ப்­பா­ட­சா­லை­க­ளுக்கு சுமார் 2,500 ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டுவர். அந்த வகையில் தமிழ்ப்­பா­ட­சா­லை­களில் நிலவும் வெற்­றி­டங்கள் குறித்த கணக்­கெ­டுப்பு அடுத்த வார­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென இரா­ஜாங்க கல்வி அமைச்சர் வி. இரா­தா­கி­ருஷ்ணன் நேற்று ­கே­ச­ரிக்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தெரி­விக்­கையில்

2015 ஆம் ஆண்டு மலை­ய­கப்­பா­ட­சா­லை­க­ளுக்கு 3026 ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­களை நிய­மிக்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்­தது. இருந்தும் 2211 பேருக்கு இந்த நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன. இதில் எஞ்­சி­யுள்ள 815 ஆசி­ரிய உத­வி­யாளர் நிய­ம­னங்­களை ஜன­வரி இறு­திக்குள் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

மேலும், 2016 ஆண்­டுக்குள் நுவ­ரெ­லியா, ஹட்டன், கண்டி, வத்­தளை ஆகிய பிர­தே­சங்­களில் புதிய தமிழ்ப் பாட­சா­லை­களை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்க ஆட்­சி­யின்கீழ் கல்­வி­ய­மைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யை­விட நல்­லாட்சி அரசு இந்த வரவு - – செலவுத் திட்டத்தில் கல்வியமைச்சுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதால் புதிய பாடசாலைகளை நிர்மாணிக்கக்கூடியதாகவுள்ளது என்றார்.