ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் வேன் ஒன்றுடன்  முச்சக்கரவண்டி மோதுண்டதில் ஒருவர் காயமுற்று கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலையிலிருந்து புலியாவத்தை சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து நுவரெலியா சென்ற வேனும்  மோதுண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின்  சாரதி காயமுற்று வைத்தியசாலையில்  அனுமதிக்க்கப்பட்டுள்ளார்.

அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கான காரணமென பொலிஸார் தெரிவித்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.