திருகோணமலை மாவட்டத்தின் மூதூரிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்திவரப்பட்ட செம்மறி ஆடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஆடுகளைக்கடத்திய நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலாலின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தலைமையிலான பொலிஸார் வீதிச் சோதனையின்போது குறித்த வாகனத்திலிருந்த அனுமதிப் பத்திரமில்லாத செம்மறி ஆடுகளை கைப்பற்றியுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ஏ.மனாப் முன்னிலையில் ஆஜர்படுத்திபோது குறித்த நபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.