மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் சிவனொளிபாதமலைக்கு சொந்தமான மலைத் தொடரில் மதியம் பரவிய தீயினால் சுமார் 15 ஏக்கர்களுக்கும் அதிகமான அரச வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

பொலிஸார் மற்றுத் லக்ஷபான இராணுவத்தினர் ஆகியோர் இனைந்து  தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக சுமார் ஒரு இரண்டு மணித்தியாலயத்திற்குள் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அடையாளம் தெரியாத நபர்களால் இவ் காட்டுப்பகுதிக்கு தீ மூட்டப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.