தினமும் 24 மணித்தியாலயங்கள் தடையற்ற மின்சாரத்தை நாடுமுழுவதும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக  சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் 24 மணித்தியாலயங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தினை வழங்குவதில் இலங்கை பின்னடைவை சந்திக் நேரிடலாம் என்ற காரணத்தால் 100 சதவீதம் தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக  அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட நாடுமுழுவதும் மின்சார விநியேகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.