25 ஆண்டுகளின் பின் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல்; ஜனாதிபதி திறந்து வைத்தார்

Published By: Devika

08 Jan, 2017 | 08:20 AM
image

இலங்கையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (7) திறந்து வைத்தார். 

சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மிகச் சரியான நிலையில் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்படுகிறது என்று, மோவன்பிக் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவியர் ச்சாவி தெரிவித்தார்.

இந்த ஹோட்டலின் ஒவ்வொரு மாடியும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும் என்றும் இது இலங்கையர்களுக்கும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோவன்பிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 83 ஹோட்டல்கள், உலகின் 23 நாடுகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57