திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் பகுதியில் உள்ள வனப்பகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 20 ஏக்கர் காடு முற்றாக எரிந்து சாம்பளாகியுள்ளது.

குறித்த தீ இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டகலை தொண்டமான் தொழில்பயிற்சி நிலைய வளாகப்பகுதிக்கு அருகில் பரவியுள்ளது.

இனம் தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன் அட்டன் நகரசபையின் தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் தீயை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்