(சதீஸ்)

வவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் மீள் குடியேறியுள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து தமக்கான வீட்டினைப் பெற்றுத் தருமாறு கோரி வவுனியா சிதம்பரபுரம் பிரதான வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்விடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே. கே. மஸ்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி வீட்டினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வடமாகாணத்திற்கு கிடைக்கவுள்ள 65 ஆயிரம் வீடுகளில் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்ததுடன் வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒரு சிலரை அழைத்துக்கொண்டு சென்று கலந்துரையாடப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெயிலில் காய்ந்து மழையில் நனைகின்றோம், காட்டாதே காட்டாதே பாராபட்சம் காட்டாதே, போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 193 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், இப்பகுதிமக்களைச ;சந்தித்து தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக  தெரிவித்திருந்தனர்.