ஒப்பந்தக்கார்களுக்கு சுகாதாரம், பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் ஹொல்சிம் லங்கா

Published By: Priyatharshan

30 Dec, 2015 | 05:06 PM
image

LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், சீமெந்து துறையில் முன்னோடியாக திகழ்வதுடன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒப்பந்தக்காரர்களுக்கான பாதுகாப்பு செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

இச் செயலமர்வு இம் மாதம் 11ஆம் திகதி சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. 80 வெவ்வேறு நிறுவனங்களின் 175க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

ஒப்பந்தக்காரர் பாதுகாப்பு செயலமர்வு என்பது, ஹொல்சிம் (லங்கா) நிறுவனத்தின் பங்குபற்றலுடன், சகல ஒப்பந்த நிறுவனங்களின் உயர் முகாமைத்துவ அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ஆழமான அறிவுப் பகிர்வு, சிறந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தலைப்புகள் பற்றிய உள்ளம்சங்களை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களை அறிமுகம் செய்யும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஹொல்சிம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபிலிப்பே ரிச்சார்ட் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பதன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றன தொடர்பில் ஹொல்சிம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகளவு கவனம் செலுத்துகிறோம். இது போன்ற அறிவுப் பகிர்வு செயற்பாடுகள் மூலமாக, சகல துறைகளிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பதை உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். எவ்வித சந்தேகங்களுமின்றி மக்கள், உலகம் மற்றும் இலாபம் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களுக்கு அமைய அமைந்துள்ளன” என்றார்.

ஹொல்சிம் சுகாதார மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கயான் பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில்,

“மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஒரு தனி நபரினால் மேற்கொள்ள முடியாது. ஆனாலும், இன்றைய நிகழ்வில், இந்தளவு உயர் பங்குபற்றலை காணும் போது, மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. பெருமளவான பங்காளர்கள் தம்மை உண்மையில் அர்ப்பணித்துள்ளதுடன், மாற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளனர்” என்றார்.

பாதுகாப்பு என்பதை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு பெறுமதி எனும் வகையில் LafargeHolcim பின்பற்றி வருகிறது. தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலமாக பாதுகாப்பு என்பதை ஹொல்சிம், தலைமைத்துவத்தின் மூலமாகவும் பொறுப்புணர்வு ஊடாகவும் முன்னெடுத்துச் செல்கிறது.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ் ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது. 

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன், ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது.  

இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திவாரங்களை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57