கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள்திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிகர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றிய மாணவர்களுக்கான மீள்திருத்த விண்ணப்பங்களை தேசிய பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களின்படி பூர்த்திசெய்து அனுப்புமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.