மகேந்திர சிங் தோனியின் பதவி விலகலையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கு அணித் தலைவராக விராட் கோலியை தேர்வாளர்கள் தெரிவுசெய்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் பதினைந்தாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கோலி தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை, நீண்ட நாட்களாக அணியில் இடம்பெற்றிராத சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலத்தின் பின் மகேந்திர சிங் தோனி தலைவராக இல்லாமல் சாதாரண வீரராக விளையாடவிருக்கும் தொடராக இது அமையவுள்ளது.